காந்தி குறித்து அவதூறு கருத்து; காளிசரண் மகராஜ் விளக்கம்

Updated : டிச 29, 2021 | Added : டிச 29, 2021 | கருத்துகள் (55)
Advertisement
ராய்பூர்: 'மகாத்மா காந்தி குறித்து கூறிய கருத்துக்கு வருந்தவில்லை,'' என, ஹிந்து அமைப்பின் தலைவர் காளிசரண் மகராஜ் தெரிவித்துள்ளார்.கடும் எதிர்ப்புமஹாராஷ்டிராவின் அகோலா என்ற இடத்தைச் சேர்ந்தவர் காளிசரண் மகராஜ் என்ற அபிஜித் சரக். ஹிந்து அமைப்பின் தலைவரான இவர், சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, மகாத்மா காந்தி குறித்து
Mahatma Gandhi, Kalicharan Maharaj, Gandhi

ராய்பூர்: 'மகாத்மா காந்தி குறித்து கூறிய கருத்துக்கு வருந்தவில்லை,'' என, ஹிந்து அமைப்பின் தலைவர் காளிசரண் மகராஜ் தெரிவித்துள்ளார்.




கடும் எதிர்ப்பு


மஹாராஷ்டிராவின் அகோலா என்ற இடத்தைச் சேர்ந்தவர் காளிசரண் மகராஜ் என்ற அபிஜித் சரக். ஹிந்து அமைப்பின் தலைவரான இவர், சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, மகாத்மா காந்தி குறித்து அவதுாறான கருத்துகளையும், நாதுராம் கோட்சே குறித்து உயர்வான கருத்துகளையும் கூறினார்.

இதற்கு, காங்., தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மஹாராஷ்டிரா சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலித்தது. 'காளிசரண் மகராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உறுதி அளித்தார். மஹாராஷ்டிராவின் அகோலா மற்றும் சத்தீஸ்கரின் ராய்ய்பூர் ஆகிய இடங்களில் காளிசரணுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் காளிசரண் மகராஜ் 'வீடியோ' ஒன்றை வெளியிட்டார்.


latest tamil news




வருந்தவில்லை


அதில் கூறியிருப்பதாவது:மகாத்மா காந்தி குறித்து அவதுாறு கருத்து கூறியதாக போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நான் பேசியதில் எந்த தவறும் இருப்பதாக நினைக்கவில்லை. என் கருத்துக்காக வருந்தவில்லை. நான் காந்தியை வெறுக்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

காளிசரண் மகராஜை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ராய்ப்பூர் எஸ்.பி., பிரசாந்த் அகர்வால் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-டிச-202119:24:29 IST Report Abuse
பேசும் தமிழன் நேரு செய்த தவறுகளால் தான்.... நாம் இன்றும் துன்பத்தை அனுபவிக்து வருகிறோம்....
Rate this:
Cancel
29-டிச-202119:20:21 IST Report Abuse
பேசும் தமிழன் மதத்தின் பெயரால் நாட்டை பிரித்த பின்பு.... அவர்களுக்கு இங்கு என்ன வேலை???
Rate this:
Cancel
29-டிச-202119:16:39 IST Report Abuse
பேசும் தமிழன் நாட்டின் பிரதமரையும்...... ஏராளமான ஜந்துக்கள் தவறாக பேசி வருகிறார்கள்... அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X