கோயில் நிதியை மீன்மார்க்கெட் கட்ட எடுப்பதா? பா.ஜ., எச்.ராஜா கேள்வி

Updated : டிச 29, 2021 | Added : டிச 29, 2021 | கருத்துகள் (77)
Advertisement
சிவகங்கை: சென்னை குயப்பேட்டை கந்தசாமி ஆதி மொட்டையம்மன் கோயில் இடத்தில் மீன்மார்க்கெட் கட்டுவதற்காக கோயில்களின் நிதி ரூ.1.55 கோடியை எடுத்தது கண்டிக்கத்தக்கது. கோயில்களில் உபரி நிதி இருந்தால் அதை கட்டாயம் வருமானம் இல்லாத கோயில்களுக்கு தான் பயன்படுத்த வேண்டும்,'' என சிவகங்கையில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.அவர் கூறியதாவது: ஜன.,3ல் சிவகங்கையில்
BJP, H Raja, temple

சிவகங்கை: சென்னை குயப்பேட்டை கந்தசாமி ஆதி மொட்டையம்மன் கோயில் இடத்தில் மீன்மார்க்கெட் கட்டுவதற்காக கோயில்களின் நிதி ரூ.1.55 கோடியை எடுத்தது கண்டிக்கத்தக்கது. கோயில்களில் உபரி நிதி இருந்தால் அதை கட்டாயம் வருமானம் இல்லாத கோயில்களுக்கு தான் பயன்படுத்த வேண்டும்,'' என சிவகங்கையில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: ஜன.,3ல் சிவகங்கையில் நடக்கும் வேலுநாச்சியார் பிறந்த நாள் விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்கிறார். திருச்செந்துார் கோயிலில் பெண் பக்தரை தாக்கிய அறநிலையத்துறை உதவி கமிஷனரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.


latest tamil news




சென்னை குயப்பேட்டை கந்தசாமி ஆதி மொட்டையம்மன் கோயில் இடத்தில் மீன் மார்க்கெட் கட்டுவதற்காக, திருத்தணி சுப்பிரமணியசுவாமி, திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி, வைகுண்ட பெருமாள் கோயில்களின் நிதி ரூ.1.55 கோடியை எடுத்தது கண்டிக்கத்தக்கது. கோயில்களில் உபரி நிதி இருந்தால் அதை கட்டாயம் வருமானம் இல்லாத கோயில்களுக்கு தான் பயன்படுத்த வேண்டும்.

பதவிக்காக ஜெ., காலில் விழுந்த சேகர்பாபு தான் அறநிலையத்துறை அமைச்சராக உள்ளார். ஹிந்து கோயில்கள் விஷயத்தில் அமைச்சர் சேகர்பாபு எல்லை மீறக்கூடாது. காங்., - தி.மு.க.,. கூட்டணி ஆட்சியில் தான் 650 மீனவர்கள் கொல்லப்பட்டனர். நுாற்றுக்கணக்கான படகுகள் சேதமாகின. பா.ஜ., ஆட்சியில் மீனவர்கள் பாதுகாப்புடன் உள்ளனர் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
29-டிச-202119:26:29 IST Report Abuse
N Annamalai யார் இதை யோசனைகளை கொடுக்கிறார்கள் .கோவில் நிதியை வேறு ஆக்க பூர்வமான செயல்களுக்கு செலவிடலாம். இதை அரசு நிதியில் செய்யட்டும் .வண்டிக்கு டோக்கன் போடுவதும் செருப்புக்கு டோக்கன் போடுவதும் நிறுத்தலாம் .கோவிலுக்கு கார் பைக் எடுத்து செல்ல முடியவில்லை .இஸ்க்கோன் கோவிலுக்கு சென்று வரவும் .அனைத்தும் இலவசம் .செருப்பு வண்டி பார்க்கிங் பிரசாதம் அனைத்தும் இலவசம் .தட்டில் போடும் காசு உண்டியலில் போட்டு விடுவார்கள் .அனைவரும் சமம் கடவுள் முன்பு .
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
29-டிச-202119:12:47 IST Report Abuse
Dhurvesh ஹிந்து மதம் என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ, அமைப்புக்கோ, இனத்திற்கோ சொந்தம் இல்லை. சந்நியாசி வேடம் போட்டு ஏமாற்றுபவர்கள் கூட்டம் தான் அதிகரிக்கும். மத வளர்ச்சிக்கு பாடு படுங்கள், மத வெறுப்பு தீவிர வாதத்திற்கு அடிகோலாதீர்கள்.
Rate this:
Cancel
29-டிச-202119:00:46 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் விலைவாசி ஏற்றத்தால் மக்கள் நடுவீதியில் அல்லாடுகிறார்கள். தங்கள் வாழ்க்கையின் இன்னல்களுக்கு நல்ல தீர்வு காண்பார் என்ற நினைவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரோ உல்லாச வாழ்க்கை அனுபவித்து கொண்டிருக்கிறார். வாழ்க ஜனநாயகம்.
Rate this:
raja - Cotonou,பெனின்
30-டிச-202111:33:45 IST Report Abuse
rajaஇங்கே விடியலு மட்டும் என்ன பன்றான்? காய்கறியிலிருந்து கட்டட பொருள்கள் வரை விலை ஏறிப்போய் விண்ணை தொட்டு கொண்டு இருக்கிறதே.. கலக்க்ஷன் கமிஷன் கரப்சன்னு இருக்கான் விடியல்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X