புதுடில்லி: பிரதமர் மோடி அதிக பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய, 'மெர்சிடஸ் - மேபாக் எஸ் 650 கார்டு' என்ற காரை பயன்படுத்தத் துவங்கியுள்ளார்.
விஷவாயு தாக்குதல்
மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது குண்டு துளைக்காத 'மஹிந்திரா ஸ்கார்பியோ' காரை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தார். கடந்த 2014ல் பிரதமரான பின், அதிக பாதுகாப்பான 'பி.எம்.டபிள்யு - 7 சீரிஸ், லேண்டு ரோவர் ரேஞ் ரோவர் வோக், டொயோட்டா லாண்ட் க்ருசர்' ஆகிய கார்களை பயன்படுத்தினார். சமீபத்தில் டில்லிக்கு வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க, புதிய மெர்சிடஸ் - மேபாக் எஸ் 650 கார்டு காரில் மோடி வந்தார்.
இந்த காரின் சிறப்புகள் குறித்து பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த கார், 6 லிட்டர் இரட்டை டர்போ இன்ஜின் பொருத்தப்பட்டது. மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும். 2 மீட்டர் துாரத்தில் இருந்து 15 கிலோ வெடிகுண்டு வீசினாலும் காரில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.விஷவாயு தாக்குதல் நடத்தினால் காரில் உள்ளவர்கள் சுவாசிக்க, தனி வழியில் பிராண வாயு சப்ளை செய்யும் வசதி உள்ளது.

ஏ.கே - 47 துப்பாக்கி குண்டுகள் துளைக்க முடியாத வலிமையான கண்ணாடிகள் காரில் பொருத்தப்பட்டுள்ளன. கார் மீது நேரடியாக வெடிகுண்டு வீசினாலும் உள்ளிருப்போருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறப்பு வகை உலோகத்தால் வாகனம் வடிவமைக்கப் பட்டு உள்ளது.
பாதுகாப்பு படை
கார் டயர் 'பஞ்சர்' ஆனாலும் வேகமாக ஓட்டிச் செல்ல முடியும். பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்பு படையின் பரிந்துரைப்படி, மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் பொருத்தப்பட்ட இரண்டு கார்கள் வாங்கப்பட்டு உள்ளன.ஒரு காரின் விலை 12 கோடி ரூபாய். ஒரு காரில் பிரதமர் மோடி செல்லும்போது, மற்றொரு கார் அவருக்கு பாதுகாப்பாக செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement