நாளிதழ் பி.டி.எப்.,களை பகிர்பவர்களுக்கு காத்திருக்கு ‛ஆப்பு': டில்லி ஐகோர்ட் எச்சரிக்கை

Updated : டிச 29, 2021 | Added : டிச 29, 2021 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: செய்தித்தாள் நிறுவனங்களின் அனுமதியின்றி இ-பேப்பர்கள், பி.டி.எப்.,களை சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்அப் குழுக்களை முடக்க டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இணையத்தின் வளர்ச்சி பல நன்மைகளை தந்தாலும், சில சட்டவிரோத செயல்களுக்கும் வழிவகை செய்கிறது. அந்த வகையில், பல செய்தி நிறுவனங்களின் செய்தித்தாள்கள், புத்தகங்களை பி.டி.எப்.,ஆக மாற்றி வாட்ஸ்அப்,
Delhi HC, Block Groups, Illegally Circulating Newspapers, ePapers, WhatsApp, வாட்ஸ்அப், இபேப்பர், நாளிதழ், குழு, பகிர்தல், சட்டவிரோதம், டில்லி, ஐகோர்ட், உயர்நீதிமன்றம்

புதுடில்லி: செய்தித்தாள் நிறுவனங்களின் அனுமதியின்றி இ-பேப்பர்கள், பி.டி.எப்.,களை சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்அப் குழுக்களை முடக்க டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இணையத்தின் வளர்ச்சி பல நன்மைகளை தந்தாலும், சில சட்டவிரோத செயல்களுக்கும் வழிவகை செய்கிறது. அந்த வகையில், பல செய்தி நிறுவனங்களின் செய்தித்தாள்கள், புத்தகங்களை பி.டி.எப்.,ஆக மாற்றி வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதற்கென குழு அமைத்து வெவ்வெறு புத்தகங்கள், செய்தித்தாள்களை குழுவில் உள்ளோருக்கு பகிர்கின்றனர். சட்டத்திற்கு புறம்பாக பரப்படும் இந்த பி.டி.எப்.,களை பலரும் டவுன்லோட் செய்து படிக்கின்றனர்.

உண்மையில், பதிப்புரிமைச் சட்டம், 1957 மற்றும் வர்த்தக முத்திரைகள் சட்டம், 1999 ஆகியவற்றின் படி, தனிநபர்கள் இ-பேப்பர்களை அல்லது தனியாருக்குச் சொந்தமான வெளியீட்டின் எந்தப் பக்கத்தையும் பகிரக் கூடாது. மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும். அதன்படி, சமூக வலைதள குழுக்களில் செய்தித்தாள்களை பகிர்வதை எதிர்த்து பல செய்தித்தாள் அமைப்புகளும் நீதிமன்றத்தை அணுகியுள்ளன.


latest tamil news


அந்த வகையில், ஹிந்தியில் வெளியாகும் டெய்னிக் பாஸ்கர் என்னும் செய்தித்தாள் நிறுவனம் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் தங்களது செய்தித்தாளின் இ-பேப்பரை வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்வதாக குறிப்பிட்டு, 85 குழுக்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், இ-பேப்பர்களை அனுமதியின்றி சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்ஆப் குழுக்களை நீக்க அல்லது முடக்க வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை அடுத்தாண்டு மே 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


latest tamil news


டில்லி உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் பகிர்பவர்களுக்கும் சேர்த்த எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், பதிப்புரிமை, காப்புரிமை சட்டப்படி இது சட்டப்படி குற்றம் என்பதால், பகிர்பவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை பாயலாம்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - chennai,இந்தியா
03-ஜன-202210:42:28 IST Report Abuse
Indian why do you keep private property in website, when you are keeping private property in public (website) , people can view or refer it. I dont have comment about this type of thoughts.
Rate this:
Cancel
Ravi Chandhar - Coimbatore,இந்தியா
29-டிச-202113:38:08 IST Report Abuse
Ravi Chandhar இன்னும் கொஞ்சம் விட்டா இவங்க டீ கடையில கூட பேப்பர் வைக்க படிக்க கூடாதுன்னு சட்டம் போடுவாங்க போலயே ....
Rate this:
Cancel
Sasi Kumar -  ( Posted via: Dinamalar Android App )
29-டிச-202112:46:58 IST Report Abuse
Sasi Kumar 0 ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X