கறுப்புக்கொடி ஏந்திய கரங்கள் காவிக்கொடி ஏந்தலாம்: தி.மு.க.,வை சாடிய சீமான்

Updated : டிச 29, 2021 | Added : டிச 29, 2021 | கருத்துகள் (41) | |
Advertisement
சென்னை:'' கறுப்புக்கொடியை கீழே வீசிய கரங்கள், காவிக்கொடியை கையிலேந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை'' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.கடந்த சில நாட்களாக , ஆளும் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு இடையே மோதல் அதிகரித்து வருகிறது. தர்மபுரியில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தின் போது மேடை ஏறிய தி.மு.க.,வினர் வாக்குவாதம் செய்தனர். இதனால், இரு
D.M.K,DMK,Seeman,சீமான்,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்,நாம் தமிழர் கட்சி

சென்னை:'' கறுப்புக்கொடியை கீழே வீசிய கரங்கள், காவிக்கொடியை கையிலேந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை'' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக , ஆளும் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு இடையே மோதல் அதிகரித்து வருகிறது. தர்மபுரியில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தின் போது மேடை ஏறிய தி.மு.க.,வினர் வாக்குவாதம் செய்தனர். இதனால், இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதற்கு பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவ கல்லூரிகள் வரும் ஜன.,12ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து, விருதுநகரில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


latest tamil news


இந்நிலையில் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆட்சிக்கு வரும் முன் ' கோ பேக் மோடி' என்றவர்கள் அதிகாரத்தில் அமர்ந்ததும், 'பிரதமர் மோடி வருகையை எதிர்க்க மாட்டோம்; அவர் எங்கள் பகையாளி அல்ல; விருந்தாளி' என்கிறார்கள். மம்தாவுக்கும், பினராயி விஜயனுக்கு மட்டும் பகையாளியாக இருப்பவர், ஸ்டாலினுக்கு மட்டும் விருந்தாளி ஆனதெப்படி? பகையாளி என்பது விருந்தாளியானது போல, நாளைக்கு விருந்தாளி கூட்டாளியாகவும் மாறி, மக்களை ஏமாளியாக்கி கறுப்புக்கொடியை கீழே வீசிய கரங்கள், காவிக்கொடியை கையிலேந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை! இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
30-டிச-202100:14:45 IST Report Abuse
Rajagopal அரசியல்ல இதெல்லாம் சகஜங்க.
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
29-டிச-202120:01:40 IST Report Abuse
ramesh வாங்குனதுக்கு நல்லா கூவுறாரு
Rate this:
Cancel
29-டிச-202119:38:31 IST Report Abuse
theruvasagan காரியம் ஆகணும்னா கொடி என்ன குடையே பிடிப்பபோம். அதுக்கும் மசியலைனா காலையும் பிடிப்போம். ஏன்னா எங்களுக்கு தன்மானமும் சுயமரியாதையும் முக்கியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X