திருப்பதிக்கு நெய் அனுப்பி அதிலும் 'கை' வைத்த ஆவின்!

Updated : டிச 29, 2021 | Added : டிச 29, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
மதுரை: மதுரை ஆவின் நிறுவனத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பதியில் லட்டு தயாரிப்புக்கு நெய் அனுப்பியதில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்த போது, ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து மதுரை
திருப்பதி, நெய், ஆவின்!

மதுரை: மதுரை ஆவின் நிறுவனத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பதியில் லட்டு தயாரிப்புக்கு நெய் அனுப்பியதில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்த போது, ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து மதுரை ஆவினில் 2019 முதல் நடந்த பணி நியமனங்கள், கமிஷனுக்காக தேவைக்கு அதிகமான பொருட்கள் கொள்முதல், தற்காலிக பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகள், வருவாய் இழப்பு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆவின் மேலாளர், அதிகாரிகள் மற்றும் கணக்கர்கள், பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடந்தது.


latest tamil news



கடந்த 4 ஆண்டுகளாக நடந்த பணி நியமனம், ஒப்பந்தம், பொருட்கள் விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டன. அதில், திருப்பதி கோயிலுக்கு லட்டு தயாரிப்புக்கு நெய் அனுப்பியதில் முறைகேடு நடந்துள்ளதும், நிறுவனங்களுக்கு போலியான ஆவணங்களை பயன்படுத்தி நெய் விநியோகம் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு துறையினர், அதனை ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Coimbatore,இந்தியா
03-ஜன-202216:34:41 IST Report Abuse
Raja எல்லாம் மேல இருக்கறவன் பாத்துக்குவான்னு சொல்லும்போதே அவரு மேல எல்லாருக்கும் ஒரு சந்தேகம் வந்தது. அதுவும் சம்பந்தமே இல்லாம மஞ்ச சட்டைல சுத்தும் போது சந்தேகம் அதிகமாச்சு.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
30-டிச-202107:28:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் டாடிக்கு கமிசன் கொறையாம போச்சாமே.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
29-டிச-202119:42:56 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN எப்போ குங்குமப் பொட்டுக்காரன் ரொம்ப பேசுனானோ, தனியார் பாக்கெட் பாலின் தரம் பத்தி லெக்ச்சர் அடிச்சானோ அப்பவே எனக்கு டவுட்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X