கொப்பரை வர்த்தகத்தில் 'சிண்டிகேட்': ஆயில் நிறுவனங்களால் உற்பத்தியாளர்களுக்கு பேரிழப்பு!

Updated : டிச 29, 2021 | Added : டிச 29, 2021 | கருத்துகள் (15) | |
Advertisement
பொள்ளாச்சி: தேங்காய் பவுடர், எண்ணெய் உள்ளிட்ட, தேங்காய் சார்ந்த பொருட்களின் விலை குறையாத நிலையில், கொப்பரைக்கு மட்டும் விலை சரிவு தொடர்கிறது. தற்போது, அரசு நிர்ணயித்துள்ள ஆதார விலையுடன் ஒப்பிடும் போது, கொப்பரை கிலோவுக்கு, 16 ரூபாய் வரை இழப்பு ஏற்படும் நிலை உள்ளது, என, உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். பொள்ளாச்சி, உடுமலை, ஆனைமலை, நெகமம், கிணத்துக்கடவு

பொள்ளாச்சி: தேங்காய் பவுடர், எண்ணெய் உள்ளிட்ட, தேங்காய் சார்ந்த பொருட்களின் விலை குறையாத நிலையில், கொப்பரைக்கு மட்டும் விலை சரிவு தொடர்கிறது. தற்போது, அரசு நிர்ணயித்துள்ள ஆதார விலையுடன் ஒப்பிடும் போது, கொப்பரை கிலோவுக்கு, 16 ரூபாய் வரை இழப்பு ஏற்படும் நிலை உள்ளது, என, உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.



latest tamil news




பொள்ளாச்சி, உடுமலை, ஆனைமலை, நெகமம், கிணத்துக்கடவு மற்றும் செஞ்சேரி சுற்றுப்பகுதிகளில், தென்னை சாகுபடி பரப்பு அதிகமுள்ளது. அடுத்த மாதம் கேரளாவிலும், ஏப்ரலில் தமிழகத்தில் சீசன் துவங்குகிறது. அதுவரையில், தேங்காய்க்கு பற்றாக்குறை நிலவும் சூழல் உள்ளது.கடந்த ஓராண்டாக, கிலோவுக்கு, 103.30 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட கொப்பரைக்கான ஆதார விலையை, தற்போது, 105.90 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இருப்பினும், வெளி மார்க்கெட்டில் நேற்று, ஒரு கிலோ கொப்பரை, 90 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. விலை சரிவு காரணமாக, உற்பத்தியாளர்கள் தயாரித்த, கொப்பரையை விற்பனைக்கு அனுப்பாததால், உற்பத்தி மையங்களிலேயே முடங்கியுள்ளன.

தற்சமயம், ஒரு கிலோ தேங்காய் பவுடர், 160 ரூபாய்; தேங்காய் எண்ணெய் (15 கிலோ டின்), 2,050 ரூபாய்க்கும் விற்பனையாகும் நிலையில், கொப்பரை விலை மட்டும் தொடர் சரிவை கண்டுள்ளது.




latest tamil news



காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி, நேற்று சாதாரண கொப்பரை கிலோ, 90 ரூபாய்க்கு, ஸ்பெஷல் கொப்பரை கிலோ, 94 ரூபாய்க்கும் விற்பனையானது.இது, கொப்பரை உற்பத்தியாளர்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு, இதே நாளில், கொப்பரை கிலோ, 140 ரூபாய் வரையில் விற்றது குறிப்பிடத்தக்கது. தேங்காய் விலை நிலையாக இருந்தும், கொப்பரை விலை பெரும் சரிவை கண்டுள்ளது.

இதற்கு, தனியார் கம்பெனிகள், ஆயில் உற்பத்தி நிறுவனங்கள், புரோக்கர்கள் ஆகியோரின் 'சிண்டிகேட்' தான் காரணமாகும். தற்போது, அரசு நிர்ணயித்துள்ள ஆதார விலையுடன் ஒப்பிடும் போது, கொப்பரை கிலோவுக்கு, 16 ரூபாய் வரை இழப்பு ஏற்படும் நிலை உள்ளது, என, உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த மோசடியில் இருந்து தென்னை விவசாயிகளையும், கொப்பரை உற்பத்தியாளர்களையும் காப்பாற்ற, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக, மாநிலம் முழுவதும் கொப்பரை கொள்முதல் மையங்களை திறந்து, கொள்முதல் துவக்க வேண்டும்.


ஆதார விலை கொள்முதல் எப்போது?


தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தின் மாநில பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:
கடந்த ஆண்டு கொப்பரை விலை சரியவில்லை. நடப்பு ஆண்டில், கொப்பரை உற்பத்தியாளர்களை ஏமாற்றவும், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற கூட்டுச்சதியாலும், பெரும் நிறுவனங்கள், புரோக்கர்கள் உதவியுடன் 'சிண்டிகேட்' அமைத்து, கொப்பரை விலையை குறைத்துள்ளனர்.

தற்போதைய நிலையில், உற்பத்தியான கொப்பரையை விற்பனை செய்ய வேண்டாம். விலை உயரும்போது விற்று பயனடையலாம். கூட்டுச்சதியால், பெரும் இழப்பை சந்தித்த கொப்பரை உற்பத்தியாளர்கள், இனி புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

இந்நிலை மாற, மத்திய, மாநில அரசுகள், கொள்முதல் மையங்களை திறந்து, ஆதார விலைக்கு கொப்பரையை கொள்முதல் செய்து, உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-டிச-202107:36:48 IST Report Abuse
அப்புசாமி ஆதார விலையை ஒசத்துவோம் ஆனா வாங்க மாட்டோம். இந்த மாதிரிதான் வேளாண் சட்டங்கள் வந்திருந்தால் கார்ப்பரேட்களும், மத்திய அரசும் சிண்டிகேட் போட்டு விளையாடும் கோவாலு. இதை முறியடிக்க உற்பத்தியாளர்கள் சிண்டிகேட் போட்டு போராடணும் கோவாலு.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
29-டிச-202116:58:26 IST Report Abuse
Kumar வெற்றி,வெற்றி புரோக்கர்களுக்கு வெற்றி. இப்ப எந்த போராளிகளும் வரமாட்டார்கள். ஏனென்றால் பிரச்சனை விவசாயிகளுக்குத்தான்.அதைப்போல‌ இந்த ஆட்டு புரோக்கர்,மாட்டு புரோக்கர்,நில புரோக்கர் இவர்களையும் மத்திய அரசு ஒழிக்கவேண்டும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
29-டிச-202116:47:30 IST Report Abuse
அப்புசாமி இந்த சிண்டிகேட் ஆளுங்கதான் நாளைக்கு வேளாண்சட்டங்கள் வந்திருந்தாலும் இதே மாதிரி ஆட்டையப் போடுவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X