சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

சங்கின் மகத்துவம் அளப்பரியது!

Added : டிச 29, 2021
Advertisement
பிரபல காது, மூக்கு, தொண்டை நிபுணர், டாக்டர் குமரேசன்: அந்த காலத்தில் ஒலிபெருக்கி கருவிகள் கிடையாது. மேடைப் பேச்சாளர்கள், பாடகர்கள், நடிகர்கள் சத்த மாக குரல் கொடுக்க வேண்டும். அதற்கு பயிற்சி அளிக்க பல ஆண்டுகளாக சங்கு பயன்பாட்டில் உள்ளது. சங்கு, ஒலி கொடுக்கும் பொருள் மட்டு மல்ல; குரலை செம்மைப்படுத்தும் கருவியும் கூட!நெல்லை மருத்துவக் கல்லுாரியில் பேராசிரியராக இருந்த
சொல்கிறார்கள்

பிரபல காது, மூக்கு, தொண்டை நிபுணர், டாக்டர் குமரேசன்: அந்த காலத்தில் ஒலிபெருக்கி கருவிகள் கிடையாது. மேடைப் பேச்சாளர்கள், பாடகர்கள், நடிகர்கள் சத்த மாக குரல் கொடுக்க வேண்டும். அதற்கு பயிற்சி அளிக்க பல ஆண்டுகளாக சங்கு பயன்பாட்டில் உள்ளது. சங்கு, ஒலி கொடுக்கும் பொருள் மட்டு மல்ல; குரலை செம்மைப்படுத்தும் கருவியும் கூட!நெல்லை மருத்துவக் கல்லுாரியில் பேராசிரியராக இருந்த போது, தாமிரபரணி ஆற்றில் சங்கு மண்ட பத்தை பார்த்து வியந்து போனேன்.தாமிரபரணி ஆற்றின் நடுவே, பல சங்கு கல் மண்டபங்கள் இருந்துள்ளன. அதன் பயன் அறியாமல், அதை பராமரிக்காமல் இழந்து விட்டோம். இன்று பெயருக்கு ஒரு சங்கு கல் மண்டபமே இருக்கிறது.

மூன்று பக்கமும் திறந்த வெளியும், தண்ணீர் வரும் எதிர் திசையில் மட்டும் கல் வைத்து அடைக்கப்பட்டு இருக்கும். அதன் உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பில், சங்கு போல் தோற்றம் அளிக்கும். அதனாலேயே இதற்கு சங்கு கல் மண்டபம் என பெயர் வந்தது. ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் மட்டம் உயரும் போது, அதில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் உயர்ந்தால், வெள்ளத்தின் அழுத்தத்தால் காற்று உந்தப்பட்டு, அந்த சங்கு சத்தம் எழுப்பும்; இது சுற்று வட்டார மக்களுக்கான எச்சரிக்கை!இதை குறிப்பால் உணர்ந்து, ஆற்றை சுற்றியுள்ள மக்கள், உயரமான இடங்களுக்கு சென்று விடுவர்.அதேபோல் தண்ணீர் மிக அதிகமானால், இந்த சங்கு அமைப்பையே மூழ்கடித்து விடும்; இது உச்சபட்ச எச்சரிக்கை. தண்ணீர் சிறிது வடிந்ததும், மீண்டும் சத்தம் கேட்கும். அந்த சத்தம், தண்ணீர் குறைய குறைய குறையும். இதன் பலன், இன்றைய தலைமுறைக்கு தெரியவே இல்லை.

தன் குரல் பெண் குரல் போல உள்ளது என்று சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்; சிலர் வெளி உலகத்துக்கு வராமல் முடங்கி விடுகின்றனர். இப்படி மகரக் கட்டு உடையாமல் பெண் குரலில் பேசுபவர்களின் குரலை, அறுவை சிகிச்சை இல்லாமல், கம்பீரமான ஆண் குரலாக மாற்றி வருகிறேன்.இதற்கு சங்கு ஊதுவது தான் முதல் பயிற்சி!குரல் பயிற்சியுடன், நுரையீரலையும் இது பலப்படுத்தும்.இயற்கையை ஒட்டி வாழும் பழக்கத்திலிருந்து நாம் வெகு துாரம் வந்து விட்டோம். 50 ஆண்டுக்குப் பிந்தைய வாழ்க்கை முறையை, மீண்டும் பழக்கப்படுத்திக் கொள்வது எதிர்கால சந்ததிக்கு நல்லது. அவசர கால மன அழுத்தம், பதற்றத்திலிருந்து அவை நம்மை பாதுகாக்கும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X