மர்ம நபர்கள் கொலை மிரட்டல் :அன்னபூரணி போலீசில் புகார்

Added : டிச 30, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை:'என் ஆன்மிக பயிற்சி பயணத்தை தடுக்கும் வகையில், கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலி சாமியார் என்ற சர்ச்சையில் சிக்கியுள்ள அன்னபூரணி, போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் அன்னபூரணி, 41. இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்: நான் இயற்கை ஒளி என்ற பெயரில் ஆன்மிக தீட்சை அளித்து,
 மர்ம நபர்கள் கொலை மிரட்டல் :அன்னபூரணி போலீசில் புகார்

சென்னை:'என் ஆன்மிக பயிற்சி பயணத்தை தடுக்கும் வகையில், கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலி சாமியார் என்ற சர்ச்சையில் சிக்கியுள்ள அன்னபூரணி, போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் அன்னபூரணி, 41. இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்: நான் இயற்கை ஒளி என்ற பெயரில் ஆன்மிக தீட்சை அளித்து, பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறேன்.

இம்மாதம் 19ல், செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமண மண்டபம் ஒன்றில் ஆன்மிக பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிட்டு இருந்தேன்.அதற்குள், 'டிவி' சேனல்களில் என்னை பற்றியும், என் ஆன்மிக சேவை குறித்தும் தவறாக சித்தரித்து வதந்தி பரப்பப்பட்டது. இதையடுத்து, நான் ஆன்மிக சேவை செய்யக்கூடாது என மர்ம நபர்கள், 'மொபைல் போன், வாட்ஸ் ஆப்' வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
என் ஆன்மிக பயிற்சி பயணத்தை தடுக்கும் வகையில் மிரட்டல்கள் வருகின்றன. இதனால், என் ஆன்மிக சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. மர்ம நபர்களால் எனக்கும், என் சீடர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. அவதுாறு பரப்புவோர் மற்றும் கொலை மிரட்டல் விடுப்போர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
.புகார் அளித்த பின் அன்னபூரணி கூறியதாவது:என்னை சிலர் சாமியார், போலி சாமியார் என்றெல்லாம் கூறுகின்றனர். நான் சாமியார் அல்ல.ஆன்மிக பணியில் ஈடுபட்டு, அதற்கான பயிற்சியை மட்டுமே அளித்து வருகிறேன். நான் திடீரென வரவில்லை; ஆறு ஆண்டுகளாக ஆன்மிக பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
01-ஜன-202214:51:20 IST Report Abuse
ngopalsami இவங்கள பாத்தா ஆன்மீக வியாதி மாதிரி தெரியலையே.
Rate this:
Cancel
Srinivasan Indumathi - chennai city,இந்தியா
31-டிச-202114:34:50 IST Report Abuse
Srinivasan Indumathi நாம் என்று மிருகங்கள் விட்டு உண்மையான கடவுளை வணங்க தீர்மானிக்கின்றோமோ அன்று தான் நமக்கு விடிவு .
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
31-டிச-202105:22:27 IST Report Abuse
meenakshisundaram எதுக்கும் இவிங்களுக்கு கருப்பு பூனை பாதுகாப்பு வழங்கிடுங்க ,அப்புறமா பேமஸ் ஆனா போயி ஆளுபவர்கள் போயி ஆசி 'பெற வசதியாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X