சென்னை:'என் ஆன்மிக பயிற்சி பயணத்தை தடுக்கும் வகையில், கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலி சாமியார் என்ற சர்ச்சையில் சிக்கியுள்ள அன்னபூரணி, போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் அன்னபூரணி, 41. இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்: நான் இயற்கை ஒளி என்ற பெயரில் ஆன்மிக தீட்சை அளித்து, பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறேன்.
இம்மாதம் 19ல், செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமண மண்டபம் ஒன்றில் ஆன்மிக பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிட்டு இருந்தேன்.அதற்குள், 'டிவி' சேனல்களில் என்னை பற்றியும், என் ஆன்மிக சேவை குறித்தும் தவறாக சித்தரித்து வதந்தி பரப்பப்பட்டது. இதையடுத்து, நான் ஆன்மிக சேவை செய்யக்கூடாது என மர்ம நபர்கள், 'மொபைல் போன், வாட்ஸ் ஆப்' வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
என் ஆன்மிக பயிற்சி பயணத்தை தடுக்கும் வகையில் மிரட்டல்கள் வருகின்றன. இதனால், என் ஆன்மிக சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. மர்ம நபர்களால் எனக்கும், என் சீடர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. அவதுாறு பரப்புவோர் மற்றும் கொலை மிரட்டல் விடுப்போர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
.புகார் அளித்த பின் அன்னபூரணி கூறியதாவது:என்னை சிலர் சாமியார், போலி சாமியார் என்றெல்லாம் கூறுகின்றனர். நான் சாமியார் அல்ல.ஆன்மிக பணியில் ஈடுபட்டு, அதற்கான பயிற்சியை மட்டுமே அளித்து வருகிறேன். நான் திடீரென வரவில்லை; ஆறு ஆண்டுகளாக ஆன்மிக பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE