2020 ஜன.1 முதல் அகவிலைப்படி வழங்க வேண்டும்; அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்

Updated : டிச 30, 2021 | Added : டிச 30, 2021 | கருத்துகள் (23)
Advertisement
மதுரை : மத்திய அரசு வழங்கியதை போல, தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவை தொகையை 2020 ஜன., 1 முதல் வழங்க வேண்டும் என மதுரையில் அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியது. மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் லட்சுமிநாராயணன் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 1.1.2021 முதல் அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31 சதவீதமாக



மதுரை : மத்திய அரசு வழங்கியதை போல, தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவை தொகையை 2020 ஜன., 1 முதல் வழங்க வேண்டும் என மதுரையில் அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியது.



latest tamil news



மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் லட்சுமிநாராயணன் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 1.1.2021 முதல் அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31 சதவீதமாக உயர்த்தி வழங்கவும், சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தை பொங்கலையொட்டி போனஸ் ரூ.3 ஆயிரம் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது வரவேற்கத்தக்கது.


latest tamil news



மத்திய அரசு ஊழியர்கள் 1.7.2021 முதல் 31 சதவீத அகவிலைப்படியை ரொக்கமாக பெற்று வருகின்றனர். மேலும் மத்திய அரசு கடந்த 1.1.2020 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவையை 2021 டிச., சம்பளத்துடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.

தமிழக அரசு அகவிலைப்படி நிலுவையை 2020 ஜன., 1 முதல் வழங்க வேண்டும்.போனஸ் சட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்குகிறது. மூன்றாண்டுகளாக தமிழக அரசு ரூ.3 ஆயிரம் மட்டுமே வழங்குகிறது. எனவே தமிழக அரசு போனஸாக ரூ.7 ஆயிரம் அறிவிக்க வேண்டும்.

ஏ, பி பிரிவினர், கிராம ஊராட்சி துாய்மை காவலர்களுக்கும் பொங்கல் கருணைத்தொகை வழங்க வேண்டும் என்றார்.நிர்வாகிகள் ஜெயராஜராஜேஸ்வரன், கல்யாணசுந்தரம், மணிகண்டன், மாரியப்பன் உடனிருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Karthikeyan - Chennai,இந்தியா
30-டிச-202113:22:48 IST Report Abuse
P Karthikeyan கல்யாணமே நடக்குமா என்று இருக்கும் நிலையில் , இலை ஓட்டை என்றானாம் ஒருவன்.
Rate this:
Cancel
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
30-டிச-202111:52:00 IST Report Abuse
Amar Akbar Antony ஏம்ப்பா இந்த கொரான கோவிட் காலமான இரண்டாயிரத்து இருபது வருடத்தில் அவனவன் வேலையில்லாமல் சம்பளம் இல்லாமல் அரை சம்பளம் வாங்கி வீட்டில் முடங்கியிருந்த காலத்தில் பள்ளிகள் இயங்காமல் முழு அடைப்பு நடந்த காலத்திற்கே கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் படி கேட்க்கும் ஊழியர்களே உங்களுக்கு அடுக்குமா எங்கும் ஊழல் எதிலும் ஊழல் அரசு ஊழியர்களே தெய்வம் நின்றுகொல்லும்.
Rate this:
30-டிச-202114:58:28 IST Report Abuse
Vittalanandக்ரோனா சாக்கு வைத்து விலை உயர்வு படிகள் மறுப்பு நல்லா இருக்கு நியாயம்...
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
30-டிச-202111:37:31 IST Report Abuse
பாமரன் பஞ்சப்படிங்கறதுக்கான அர்த்தமே மாறி போச்சு... விலைவாசிக்கேற்ப தர்றாங்கன்னா அப்புறம் ஏன் வருடாந்தர இன்கிரிமெண்ட்? நியூஸையும் அதுக்கு போட்டிருக்கும் போட்டோவையும் பார்த்தால் அவ்ளோ காண்டாகுது மய் லார்ட்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X