தற்கொலைக்கு தூண்டும் தி.மு.க.,வினர்: எஸ்.ஐ., வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு

Updated : டிச 30, 2021 | Added : டிச 30, 2021 | கருத்துகள் (47)
Advertisement
வேலுார் : தி.மு.க., பிரமுகர்கள் தொல்லையால், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வேப்பங்குப்பம் எஸ்.ஐ., வெளியிட்ட ஆடியோ குறித்து விசாரணை நடந்து வருகிறது.வேலுார் மாவட்டம், வேப்பங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் சீனிவாசன், 50. தற்கொலை செய்து கொள்ள போவதாக, இவர் பேசிய ஆடியோ, தற்போது 'வாட்ஸ் ஆப்'பில் வேகமாக பரவி வருகிறது.சீனிவாசன் வெளியிட்ட ஆடியோவில்
DMK, police, SI

வேலுார் : தி.மு.க., பிரமுகர்கள் தொல்லையால், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வேப்பங்குப்பம் எஸ்.ஐ., வெளியிட்ட ஆடியோ குறித்து விசாரணை நடந்து வருகிறது.

வேலுார் மாவட்டம், வேப்பங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் சீனிவாசன், 50. தற்கொலை செய்து கொள்ள போவதாக, இவர் பேசிய ஆடியோ, தற்போது 'வாட்ஸ் ஆப்'பில் வேகமாக பரவி வருகிறது.


latest tamil news


சீனிவாசன் வெளியிட்ட ஆடியோவில் பேசியிருப்பதாவது :நான் வேப்பங்குப்பம் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறேன். ஏலச்சீட்டு மோசடி சம்பவம் குறித்து, தி.மு.க., பிரமுகர்கள் சிலர் வழக்கு பதிவு செய்யக்கூடாது என மிரட்டுகின்றனர். வழக்கு பதிவு செய்யாத காரணத்தை, உயர் அதிகாரிகளிடம் கூறி விட்டேன். இங்கு மணல் கடத்தினால், வழக்கு பதிவு செய்யக்கூடாது என, தி.மு.க., பிரமுகர்கள் சிலர் டார்ச்சர் செய்கின்றனர்.

எனக்கு மன உளைச்சல் அதிகமாக உள்ளது. என்னால் வாழ முடியவில்லை. அதனால், 29ம் தேதி இரவு தற்கொலை செய்து கொள்ள போகிறேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்த ஆடியோவில் மிரட்டிய நான்கு, தி.மு.க., பிரமுகர்களது பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
30-டிச-202114:58:40 IST Report Abuse
raja பொய் பேருல இருக்கிற ஒருத்தன் கூட வந்து ஒரு கருத்தும் பதிவிட வில்லையே அது ஏன்?... அட்லிஸ்ட்டு அவரு ஒரு சங்கின்னு னாவது சொல்லலாமுல்ல...
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
30-டிச-202114:05:54 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN எஸ். ஐ கே இந்த கதி என்றால் சாதாரண தமிழக மக்களின் நிலையை நினைத்தால் நெஞ்சம் பதருகிறது, திமுகவுக்கு ஓட்டு போட்டவர் எவ்வளவு பெரிய முட்டாள்கள் என்பதை இது காட்டுகிறது, சரி தமிழகத்திற்கு நன்மையை செய்த கர்ம வீரர் காமராஜ்ரையை தோற்கடித்தவர்கள் தானே தமிழக மக்கள், இவர்களுக்கு ஓட்டு போட பணம் கொத்து பொய் கூறி கவர்ச்சி விளம்பரம் செய்தால் யோசிக்காமல் யாருக்கும் வேண்டுமானாலும் ஓட்டு போடுவார்கள்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
30-டிச-202113:12:25 IST Report Abuse
Indhuindian தி மு க ஆட்சியில் இதெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்ததுதான். அதற்க்கு ட்ரைலெராகதான் பிரியாணி கடை தாக்குதல் பஜ்ஜி கடை தாக்குதல். பதினொன்று மணிக்கு ஆட்சியில் நாற்காலியில் அமருவோம் நீங்க பதினோன்னு அஞ்சுக்கு மணல் அல்லலாம்னு வார்னிங் கொடுக்கும்போதே ஜனங்க கொஞ்சம் உஷாரா இருந்திருக்கணும் அதெயெல்லாம் கண்டுக்காம விடியல் வரும்னு நம்பி வோட்டு போட்ட அது அவங்க செஞ்ச தப்பு இப்போ போலீஸ் இன்ஸ்பெக்டர் வாக்கு மூலம் குடுத்திருக்காரு. இப்போ கூட்டி கஷிச்சீ பாருங்க கணக்கு சரியா வரும். அது சரி இந்த பாக்ஸ் காண் ஆலையில் நடந்த மர்மம் என்ன அதை யார் அவிஷக்கப்போகிறார்கள். இப்போ தற்காலிகமா மூடி விட்டு காரணம் கண்டு பிடிச்சி சரி செஞ்சி மீண்டும் தீர்க்கப்போறாங்களா அது வரிக்கும் சம்பளம் குடுத்டுடுவாங்கலாம் இதெல்லாம் நம்பர மாதிரியா இருக்கு. அங்க வேலை செய்யறவங்க தங்கி சாப்பிடற விடுதியிலே ஏதோ பிரச்சனை இதை சரி செய்ய என்ன மாமாங்கமா ஆகும். கொஞ்ச காலம் கஷிச்சீ இங்கே இருக்கற ஆட்களை வெச்சி ஆலையை சரியா நடத்த முடியலே சாரி நான்க வேறே இடத்துக்கு போயிடறோம். அது வெறும் அசெம்பிளி லைன் அப்படியே அனுமார் சஞ்சீவி மலய அலேக்கா தூக்கினு போனமாதிரி இந்த அசெம்பிளி லயன மாத்தறதுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும். விடியல் வந்து விட்டது மக்கள் விசித்துக்கொவதுதான் புத்திசாலித்தனம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X