பிரதமருக்கு புது கார் ஏன்? மத்திய அரசு விளக்கம்!

Updated : டிச 30, 2021 | Added : டிச 30, 2021 | கருத்துகள் (44) | |
Advertisement
புதுடில்லி: சிறப்பு பாதுகாப்புப் படையின் விதிகளின்படி, பிரதமர் மோடி பயன்பாட்டிற்கு, 'மெர்சிடிஸ் மேபேக்' ரக சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அதிக பாதுகாப்பு வசதிகளை உள்ளடக்கிய, 'பி.எம்.டபிள்யு., - 7 சீரிஸ், லேண்ட் ரோவர், ரேஞ்ச் ரோவர் வோக்' ஆகிய கார்களை, பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வந்தார். சமீபத்தில் இந்தியா வந்திருந்த ரஷ்ய அதிபர்
பிரதமர், கார், மத்திய அரசு, எஸ்பிஜி,

புதுடில்லி: சிறப்பு பாதுகாப்புப் படையின் விதிகளின்படி, பிரதமர் மோடி பயன்பாட்டிற்கு, 'மெர்சிடிஸ் மேபேக்' ரக சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிக பாதுகாப்பு வசதிகளை உள்ளடக்கிய, 'பி.எம்.டபிள்யு., - 7 சீரிஸ், லேண்ட் ரோவர், ரேஞ்ச் ரோவர் வோக்' ஆகிய கார்களை, பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வந்தார். சமீபத்தில் இந்தியா வந்திருந்த ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க சென்ற பிரதமர் மோடி, மெர்சிடிஸ் மேபேக் என்ற சொகுசு காரில் வந்திறங்கியது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த காரின் விலை, 12 கோடி ரூபாய் என ஊடகங்கள் தெரிவித்தன. அதற்கு பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மெர்சிடிஸ் மேபேக்கின் விலை குறைவு தான். ஊடகங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த அந்த யூக விலையில், மூன்றில் ஒரு பங்கு தான் அதன் உண்மையான விலை.எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படைப் பிரிவினர், பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். அந்த படைப் பிரிவின் விதிகளின்படி, ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை, பிரதமர் பயன்படுத்தும் வாகனங்கள் மாற்றப்பட வேண்டும். எனினும், எட்டு ஆண்டுகளாக பழைய கார்களையே பிரதமர் பயன்படுத்தி வந்தார்.


latest tamil news
பிரதமரின் பாதுகாப்பு நலனை கருத்தில் வைத்து, அவரின் கார்களை மாற்ற, எஸ்.பி.ஜி., படையினர் முடிவு செய்தனர். பிரதமரின் விருப்பத்தை கூட பெறாமல், அவர்கள் இந்த முடிவை எடுத்தனர். பிரதமர் பயன்படுத்தி வந்த பி.எம்.டபிள்யு., ரக கார் இப்போது தயாரிக்கப்படுவது இல்லை என்பதால், மெர்சிடிஸ் நிறுவன கார் வாங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
30-டிச-202119:35:39 IST Report Abuse
Suri இந்த செய்தி ஜி ஜி க்கு மேலும் மேலும் அசிங்கத்தை மட்டும் தான் சேர்கிறது. ஒரு பிரதமருக்கு கூட தெரியாமல் அவருடைய பாதுகாப்புக்கு புது கார் வாங்க யாருக்கு அதிகாரம் இருக்கு? இப்போ ஜி ஜி ரொம்ப ரொம்ப எளிமையானவர் தானே? இப்படி ஒரு விலை உயர்ந்த கார் வாங்கியது அவருக்கு பிடிக்கவில்லை என்று அந்த காரில் ஏற மாட்டேன் என்று கூவுவாரா?அந்த காரை ஏலம் விட்டு அந்த பணத்தை பிரதமர் நிவாரண நிதியில் சேர்த்துவிடுவாரா?
Rate this:
Cancel
Ram -  ( Posted via: Dinamalar Android App )
30-டிச-202118:31:47 IST Report Abuse
Ram Atleast, this is for only PM and any subsequent PM will also have the same...While Congress was in power, Rajiv took all the Italian family in our warship for holiday.Nehru always took Indira at our cost So, this is nothing
Rate this:
Cancel
dhiravidan - paris,பிரான்ஸ்
30-டிச-202116:26:04 IST Report Abuse
dhiravidan போங்கப்பா ... ஒரு பன்னிரண்டு கோடி ரூபாய்க்கு இப்படியெல்லாம் கூப்பாடு போடறீங்க ஏழை பிரதமர் நல்ல காருல போக வேண்டாமா ?
Rate this:
Suri - Chennai,இந்தியா
30-டிச-202120:00:31 IST Report Abuse
Suriசால்ஜாப்பு செய்கிறேன் பேர்வழி என்று நிலைமையை இன்னும் மோசமாக்கி ஒரு கதை சொல்லி ஜி ஜி க்கு மேலும் அசிங்கத்தை சேர்த்திருக்கிறார்கள். பிரதமருக்கு தெரியாமல் பிரதமருக்கு கார் வாங்கும் அதிகாரம் எல்லாம் ஒன்றிய அரசில் சாத்தியமா? அப்படி அது சாத்தியம் என்றால் இப்படி இன்னும் என்ன என்ன எல்லாம் பிரதமருக்கு தெரியாமல் செய்கிறார்கள்? இப்படிப்பட்ட கண்ட்ரோல் இல்லாத பிரதமர் நாட்டுக்கு தேவையா? அவர் அலுவலகத்தில் அவருடைய பாதுகாப்பு குறித்த விஷயத்தில் அவருடைய உத்தரவோ இல்லை அனுமதியோ இல்லாமல் இது எல்லாம் வாங்கப்படுகிறது என்று கூறுவத நம்புவது என்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதுவும் இப்படி வெளிப்படையாக தெரியும் ஒரு விஷயத்தை கூட பிரதமர் அனுமதி இல்லாமல் செய்யமுடியும் என்பதை அலுவல் நடைமுறை அறிந்தவர் யாரேனும் ஏற்பார்களா? அதுவும் தன்னை வெளி உலகிற்கு மிக அற்புதமாக நேர்த்தியாக நளினமாக ஏழைபங்காளனாக எளிமையானவராக காட்டும் முயற்சியில் அதீத ப்ரயத்னம் எடுத்துக்கொள்ளும் இப்படிப்பட்ட ஒரு ஜிஜி இதை எல்லாம் அவருடைய அனுமதி இல்லாமல் நடைமுறைப்படுத்த அனுமதிப்பார்? இவர்கள் கூறுவது உண்மை எனில் ஜிஜி அந்த காரில் ஏறாமல் தவிர்த்து இருக்கலாம் அல்லவா? இவர்கள் பிம்பம் கட்டமைக்கிறேன் பேர்வழி என்று ஜிஜி க்கு அசிங்கத்துக்கு மேல் அசிங்கத்தை சேர்க்கிறார்கள்....
Rate this:
raja - Cotonou,பெனின்
31-டிச-202111:08:29 IST Report Abuse
rajaஅப்போ அதே லாஜிக்கு படி பார்த்தா இங்கே உடன்பிறப்புகள் எல்லாம் விடியலுக்கு தெரிந்தே தான் கொள்ளை அடிக்கிறானுவோ மணல் கடத்துறானுவோ, கனிம வளத்தை கொள்ளை அடிக்கிறானுவோ விலைவாசிகளை ஏத்தி தமிழக மக்கள் வயிற்றில் அடித்து கொள்ளை லாபம் அடிக்கிறானுவோ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X