பறவை பார்த்தல் என்பது உலகின் மிகப் பெரிய பொழுதுபோக்குகளுள் ஒன்று. ஆனால், இதற்கென கானகத்திற்குப் போகவேண்டுமே என்று நினைப்போருக்கு உதவ வருகிறது அமெரிக்காவைச் சேர்ந்த 'பேர்ட் பட்டி' (mybirdbuddy.com). இயற்கைக்கும், ஆர்வலர்களுக்கும் நேரடி தொடர்பை ஏற்படுத்துவதுதான் நோக்கம் என்கின்றனர் இதனை நிறுவியவர்கள்.
பேர்ட் பட்டி என்பது ஒரு நவீன பறவைக்கூண்டு. அதில், பறவைகளுக்கான இரையை வெளியேற்றும் வசதி உண்டு.மேலும், இரை உண்ண வரும் பறவைகளை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும் வசதியுள்ள கேமிராவும் இந்தக் கூண்டோடு இணைக்கப்பட்டுள்ளது.
பறவை ஆர்வலர் இந்தக் கூண்டை வாங்கி, தனது வீட்டு மாடி அல்லது பின்புற தோட்டத்தில் நட்டுவைத்து விடலாம். பறவைகள் வந்து அமர்ந்ததும், கூண்டே புகைப்படம் எடுத்து ஆர்வலரின் மொபைலில் உள்ள பேர்ட் பட்டி செயலிக்கு அனுப்பிவிடும்.அருகே இருந்தால், ஆர்வலர் சத்தமில்லாமல் வந்து, கூண்டில் தீனி தின்னும் பறவையை ரசிக்கலாம்.
வீடு தேடி வரும் பறவைகளின் புகைப்படங்களை சேகரிப்பதை ஒரு வீடியோ கேம் போலவே பேர்ட் பட்டியின் நிறுவனர்கள் வடிவமைத்துள்ளனர்.'போகேமான் கோ' வீடியோகேம் போலவே இதிலும், ஒவ்வொரு புதுமையான பறவையின் புகைப்படத்துக்கும் கூடுதல் புள்ளிகள், பேட்ஜுகள் போன்ற வற்றை வெல்ல முடியும்.
வழக்கமாக பறவை பார்த்தலில் ஆர்வமுள்ளவர்களால் புகைப்படங்களை எடுக்க முடியாது. ஆனால், பேர்ட் பட்டியை வாங்கி வைப்பவர்களால், வந்து செல்லும் ஒவ்வொரு பறவையின் படத்தையும் தவறாமல் எடுக்க முடிவதோடு, அவற்றை சேமிக்கவும், பிறருக்கு காண்பிக்கவும் முடியும்.
பேர்ட் பட்டி வைத்திருப்போர், சமூக வலைத்தளங்களில் தங்கள் வீட்டுக்கு வந்த பறவை விருந்தாளிகளைப் பற்றி பெருமையுடன் பகிர முடியும்.அதே விருந்தாளி இன்னொரு பேர்ட் பட்டி வைத்திருப்பவரின் வீட்டுக்கும் வந்திருந்தால் அதையும் உடனே கண்டுகொள்ள முடியும். விரைவில், செயலியே அரிய பறவைகளை இனம் கண்டுபிடிக்கும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement