சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பதுங்கித் தாக்கும் கடலடி 'ட்ரோன்!'

Added : டிச 30, 2021 | கருத்துகள் (3)
Advertisement
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டால், எதிரி நாட்டினரிடம் விமானிகள் சிக்கிக்கொள்ளும் அபாயம் உண்டு. இதைத் தவிர்க்கவே ஆளில்லாமல் பறந்து தாக்கும் 'ட்ரோன்'கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கென பல ஆயிரம் கோடி டாலர்களை அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான 'தார்ப்பா' செலவளித்திருக்கிறது. அதற்கு ஏற்ற நல்ல பலன்கலையும் கடந்த இருபது ஆண்டுகளில் அது அறுவடை செய்துள்ளது.தற்போது,
 பதுங்கித் தாக்கும் கடலடி 'ட்ரோன்!'

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டால், எதிரி நாட்டினரிடம் விமானிகள் சிக்கிக்கொள்ளும் அபாயம் உண்டு. இதைத் தவிர்க்கவே ஆளில்லாமல் பறந்து தாக்கும் 'ட்ரோன்'கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கென பல ஆயிரம் கோடி டாலர்களை அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான 'தார்ப்பா' செலவளித்திருக்கிறது. அதற்கு ஏற்ற நல்ல பலன்கலையும் கடந்த இருபது ஆண்டுகளில் அது அறுவடை செய்துள்ளது.



தற்போது, நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு மாற்றாக, கடலடி ட்ரோன்களை உருவாக்க நினைக்கிறது தார்ப்பா.அதற்கான முதற்கட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து, இரண்டாம் கட்ட மாக, இரண்டு தனியார் பாதுகாப்பு தொழில்நிறுவனங்களுக்கு ஆணை வழங்கியுள்ளது.

கடலுக்கடியில் மனிதர்கள் இன்றி தானாகவே பயணிக்கும் திறன் கடலடி தாவரங்கள், பெரிய மீன்களிடம் சிக்காமல் செல்லுதல், பாறைகளின் இண்டு இடுக்குகளில் மாட்டிக்கொள்லாமல் வேகமாக பயணித்தல். தேவைப்பட்டால் தரைதொட்டு பதுங்கியிருத்தல்.குண்டுகளை சுமந்து சென்று இலக்கை நெருங்கி தாக்குதல். இப்படி பல போர்ச் செயல்களை, மனித உதவியின்றி செய்து முடிக்கும் திறன் அந்த டிரோன்களுக்கு இருக்கவேண்டும்.

மேலும், கடலடி நீரோட்டங்களை வைத்தே அவை மின்கலன்களுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளவேண்டும்.மின்சாரத்தில் இயங்கும் நீர்மூழகி ட்ரோன் என்பதால், அது தனது பராமரிப்பை தானே பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், எதிரிகளின் ரேடார் போன்றவற்றில் சிக்காமல், பதுங்கி தாக்கும் திறமையும் அதற்கு இருக்க வேண்டும்.

இத்தனையையும் செய்து காட்டும் கடலடி ட்ரோனுக்கு பல பில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் கிடைக்கும் என தார்ப்பா அறிவித்திருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RandharGuy - Kolkatta,இந்தியா
06-ஜன-202210:54:18 IST Report Abuse
RandharGuy காபி அடிச்சி என்ன பிரயோஜனம் ......தைரியம் இல்லாத ஒரு தலைமை ....ஆக்கிரமிப்னு சொல்லியும் வாய் திறக்க மறுக்கும் தலைமை .......
Rate this:
Cancel
Subramaniam - Prague,செக் குடியரசு
31-டிச-202113:31:51 IST Report Abuse
Subramaniam இனி இந்தியாவும் காப்பி அடிக்கும்.
Rate this:
Krish - Salem,இந்தியா
05-ஜன-202214:39:22 IST Report Abuse
Krishவெளிநாட்டில் இருத்துகொண்டு இந்தியாவை பற்றி பேச அருகதை இல்லை......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X