கடலுக்கடியில் நிகழும் நிலநடுக்கமே 'சுனாமி' எனப்படும் ஆழிப் பேரலைக்குக் காரணம். ஆழிப் பேரலை ஏற்படும் பகுதியில், அதற்கு முன்பாக, பூமியின் காந்தப்புலத்தில் மாறுதல்கள் ஏற்படும். இது விஞ்ஞானிகளுக்குத் தெரியும். ஆனால், காந்தப்புல மாறுதலுக்கும், கடல் அலைகள் மட்டம் உயர்வதற்கும் உள்ள தொடர்பை விஞ்ஞானிகளால் இதுவரை கண்டறியமுடியவில்லை.
அண்மையில், ஜப்பானிலுள்ள கியோட்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், 2009ல் சமோவா விலும், 2010ல் சிலியிலும் நிகழ்ந்த ஆழிப் பேரலைகளின் தரவுகளை வைத்து ஆராய்ந்தனர்.அதன்படி, சுனாமிக்கு சில நிமிடங்கள் முன்பாக அந்தக் கடலடி நிலப்பரப்பில் புவிகாந்தப்புலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் நேர்ந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.
அந்த மாற்றத்தின் அளவை வைத்து, கடலலைகள் எந்த அளவுக்கு உயர்ந்து கரை நோக்கிச் செல்லும் என்பதையும் கணிக்க முடியும் என்று அவர்கள் நிறுவியுள்ளனர். இந்த ஆய்வு, 'ஜே.ஜி.ஆர்., சாலிட் எர்த்' இதழில் வெளியாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE