மலேரியாவுக்கு இயற்கை மருந்து!
ஆப்ரிக்காவில் ஒரு பகுதியில், புதரில் விளையும் ஒரு செடியின் இலைகளை மலேரியாவிற்கு மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செடியைப் பிடுங்கினால் மட்டுமே, மலேரியாவைப் போக்கும் மருந்து அந்த இலைகளில் உற்பத்தியாகிறது என்பதை நவீன மருந்து ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
செடியிலிருந்து இலைகள் பறிக்கப்பட்டதும், அவற்றின் உட்பகுதி காற்றில் படுகிறது. இதனால், செடி காயமடைந்துவிட்டதாக கருதி, இயல்பாகவே அதை ஆற்றுவதற்காக 'அனிமோனின்' என்ற வேதிப் பொருள் சுரக்கிறது. அதுதான் மலேரியாவுக்கு நல்ல மருந்தாகிறது. எத்தியோப்பியாவிலுள்ள அடிஸ் அபாபா பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியின் மார்டின் லுாதர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இதனை உறுதி செய்துள்ளனர்.
பல்லுக்கும் மனசுக்கும் தொடர்பு!
பற்களின் நலனுக்கும், பல்வேறு நோய்கள் மற்றும் மன நலத்திற்குமே தொடர்பு உண்டு. இதை, பிரிட்டனில் ஒரு விரிவான ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதயநோய், ரத்த அழுத்தம், உளவியல் நோய்கள் என்று பலவற்றுக்கும், பல் நோய்களுக்கும் நேரடியாகவே தொடர்பு இருக்கலாம் என 'பி.எம்.ஜே. ஓப்பன்' என்ற ஆய்விதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது. இதனால், ஆண்டுக்கு ஒரு முறையாவது பல் பரிசோதனைகளை எல்லோரும் மேற்கொள்ளவேண்டும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அதேபோல, மருத்துவர்களும், பல் நோய்கள் இருப்போருக்கு, வேறு பெரிய நோய்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்பதை உணர்ந்து சோதனைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அந்த ஆய்வு அறிவுறுத்துகிறது.
முதியோரைக் காக்கும் நுட்பம்!
வீட்டில் தனியே வசிக்க நேரிடும் 65 வயதுக்கும் மேற்பட்டோருக்கு ஒரு பெரிய சவால் தலை சுற்றல்தான். உலகெங்கும் பல லட்சக்கணக்கானோர் நிலை தடுமாறி விழுந்து ஏற்படும் பாதிப்பால் மரணமடைகின்றனர். இன்னும் பல லட்சக்கணக்கானோருக்கு, இடுப்பெலும்பு முறிவது போன்ற முடக்கும் விபத்துக்கள் நேர்கின்றன.இதைத் தடுக்கவே 'சேப்லி யூ' (SafelyYou) என்ற அமெரிக்க நிறுவனம் ஒரு கருவியை உருவாக்கியுள்ளது.
கேமிரா, செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஆகியவற்றைக் கொண்டு இயங்கும் இந்தக் கருவியை, முதியோர் வாழும் இல்லங்களில் நிறுவி விட வேண்டும்., முதியவரின் சாதாரண நடை, மற்றும் அசைவுகளை இந்த கேமிராக்கள் பதிவு செய்யாது.
ஆனால், திடீரென தரையில் விழுந்தால் அதை உடனே புரிந்துகொண்டு வீடியோவில் பதிவு செய்யும். அந்தப் பதிவைப் பார்த்து, அடி எப்படிப்பட்டது என்பதை வீட்டிலிருப்போரே கணிக்கலாம். மருத்துவரும் அதைப் பார்த்து துல்லியமாக சிகிச்சை செய்யலாம்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement