சென்னை: தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் டிச.,31 நள்ளிரவு 12 மணி தரிசனத்திற்கு தடை இல்லை என ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவிவருவதை அடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் விதித்துள்ளன. அதன்படி, தமிழகத்தில் கடற்கரைப் பகுதிகளில் டிசம்பர் 31ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், டிசம்பர் 31ம் தேதி இரவில் கோவில்கள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.

ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ‛புத்தாண்டையொட்டி டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணிக்கு கோவில்களில் தரிசனம் செய்ய தடை இல்லை. ஆனால், சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து பக்தர்கள் கோவில்களில் தரிசனம் மேற்கொள்ளலாம்,' என்றார். இதனையடுத்து பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE