புத்தாண்டு நள்ளிரவு கோயில்களில் தரிசனத்திற்கு தடையில்லை; அமைச்சர் தகவல்| Dinamalar

புத்தாண்டு நள்ளிரவு கோயில்களில் தரிசனத்திற்கு தடையில்லை; அமைச்சர் தகவல்

Updated : டிச 30, 2021 | Added : டிச 30, 2021 | கருத்துகள் (55) | |
சென்னை: தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் டிச.,31 நள்ளிரவு 12 மணி தரிசனத்திற்கு தடை இல்லை என ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் பல மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவிவருவதை அடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் விதித்துள்ளன. அதன்படி, தமிழகத்தில் கடற்கரைப் பகுதிகளில் டிசம்பர் 31ம் தேதி இரவு
NewYear, Minister, Temples, MidNight, புத்தாண்டு, நள்ளிரவு தரிசனம், தடை இல்லை, அமைச்சர், சேகர்பாபு

சென்னை: தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் டிச.,31 நள்ளிரவு 12 மணி தரிசனத்திற்கு தடை இல்லை என ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவிவருவதை அடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் விதித்துள்ளன. அதன்படி, தமிழகத்தில் கடற்கரைப் பகுதிகளில் டிசம்பர் 31ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், டிசம்பர் 31ம் தேதி இரவில் கோவில்கள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.


latest tamil news


ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ‛புத்தாண்டையொட்டி டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணிக்கு கோவில்களில் தரிசனம் செய்ய தடை இல்லை. ஆனால், சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து பக்தர்கள் கோவில்களில் தரிசனம் மேற்கொள்ளலாம்,' என்றார். இதனையடுத்து பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X