அரசாங்கத்தை வழிநடத்த விருப்பமில்லை: வழிகாட்ட விரும்புகிறேன்: சரத்பவார்

Updated : டிச 30, 2021 | Added : டிச 30, 2021 | கருத்துகள் (15)
Advertisement
புனே: ‛அரசாங்கத்தை வழிநடத்துவதை விட அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் நபரை ஆதரித்து வழிகாட்ட விரும்புகிறேன்' என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.கடந்த 2019ம் ஆண்டு, மஹாராஷ்டிராவில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் ஆட்சி அதிகாரம் தொடர்பாக பா.ஜ., - சிவசேனா இடையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு கூட்டணியை முறித்துக்கொண்டதால், எந்த
NCP, Sharad Pawar, Maharashtra, Ajit Pawar, தேசியவாத காங்கிரஸ், சரத் பவார், அஜித் பவார், தலைமை,

புனே: ‛அரசாங்கத்தை வழிநடத்துவதை விட அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் நபரை ஆதரித்து வழிகாட்ட விரும்புகிறேன்' என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு, மஹாராஷ்டிராவில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் ஆட்சி அதிகாரம் தொடர்பாக பா.ஜ., - சிவசேனா இடையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு கூட்டணியை முறித்துக்கொண்டதால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரான சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார். இதில், முதல்வராக பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிசும், துணை முதல்வராக அஜித் பவாரும் பொறுப்பேற்றனர்.

ஆனால் சரத்பவாரின் விருப்பத்திற்கு மாறாக பா.ஜ.,வுடன் அஜித் பவார் கூட்டணி அமைத்ததால், அவருக்கு தேசியவாத காங்., எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால், பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது. இதனைதொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியை பிடித்தது. பா.ஜ.,வுடன் உறவை முறித்து கொண்ட அஜித் பவாருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது.


latest tamil news


இந்நிலையில் இந்த நிகழ்வுகள் தொடர்பாக சரத் பவார் விளக்கியுள்ளார். அவர் கூறியதாவது: பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க நான் அஜித் பவாரை அனுப்பியிருந்தால், அவர்கள் ஆட்சியில் தொடர்ந்து இருந்திருப்பார்கள். அதனை நான் உறுதி செய்திருப்பேன். முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், நிர்வாக அனுபவமுள்ள மற்ற அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


அவரிடம், ‛2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவு வெளியான பிறகு, நீங்கள் பிரதமராக வாய்ப்பு உள்ளதா' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த சரத் பவார், ‛அரசாங்கத்தை வழிநடத்துவதை விட அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் நபரை ஆதரித்து வழிகாட்ட விரும்புகிறேன்,' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-டிச-202108:46:08 IST Report Abuse
பேசும் தமிழன் வழி நடத்தினால்... பின்னால் ஆட்சி மாறிய உடன் வழக்கு வந்து சேரும்... வழி காட்டினால் ஊழல் செய்து பயன் அடைந்த பின்பு செய்த ஊழலை... ஆட்சி செய்தவர் மீது போட்டு தப்பித்து கொள்ளலாம்... அது தான் பெரியவர் அந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்
Rate this:
Cancel
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
30-டிச-202119:33:36 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRN தன் வினை தன்னைச் சுடும் .................நாள் நெருங்குகிறது.........கிட்ட ...கிட்ட
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
30-டிச-202119:32:50 IST Report Abuse
M S RAGHUNATHAN இதில் மறைந்து உள்ள உண்மையை கவனிக்கவும். அமைதியாக திருமதி சோனியா காந்தி அவர்களை அரசியலில் இருந்து வெளியே அனுப்புகிறார். ராகுல் காந்தி PM பதவிக்கு லாயக்கில்லை என்று மமதா சொல்லிவிட்டார். இவர் சோனியாவை சொல்லிவிட்டார். காங்கிரஸ் அறிவாளிகளுக்கு புரிந்தால் சரி. நம் ஊர் முரசொலி அறிவாளிகளுக்கு புரிந்தால் சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X