டெல்டா - ஒமைக்ரான் இணைந்து கொரோனா சுனாமி: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Updated : டிச 31, 2021 | Added : டிச 30, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
ஜெனிவா: டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகைகள் இணைந்து இரட்டை அச்சுறுத்தல்களாக மாறியுள்ளதாகவும், இவை கொரோனா பாதிப்பின் சுனாமியை ஏற்படுத்துவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.உலக அளவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்டா வைரஸ் தொற்றால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதைவிட அதிகளவு பரவும் ஒமைக்ரான் வைரஸ் புதிய அச்சுறுத்தலை
WHO, Warns, Covid Tsunami, Omicron, உலக சுகாதார அமைப்பு, கொரோனா சுனாமி, கோவிட், எச்சரிக்கை

ஜெனிவா: டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகைகள் இணைந்து இரட்டை அச்சுறுத்தல்களாக மாறியுள்ளதாகவும், இவை கொரோனா பாதிப்பின் சுனாமியை ஏற்படுத்துவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக அளவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்டா வைரஸ் தொற்றால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதைவிட அதிகளவு பரவும் ஒமைக்ரான் வைரஸ் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கூறியதாவது: டெல்டா மற்றும் ஒமைக்ரான் கொரோனா வகைகள் இணைந்து இரட்டை அச்சுறுத்தல்களாக மாறியுள்ளன. இது புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது.


latest tamil news


மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள், உயிரிழப்புகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 11 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. டெல்டாவை போலவே ஒமைக்ரான் அதிவேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இவை கொரோனா பாதிப்பின் சுனாமியை ஏற்படுத்துகிறது. இது ஏற்கனவே அழுத்தத்தில் இருக்கும் சுகாதார கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
31-டிச-202103:09:32 IST Report Abuse
Ramesh Sargam உலக சுகாதார மையத்தின் இன்றைய மக்களை பயமுறுத்தும் எச்சரிக்கை. இந்த மையத்திற்கு மக்களை அச்சுறுத்துவதே வேலை. மக்களை வரும் அபாயத்தில் இருந்து எப்படி காக்கவேண்டும் என்று ஒரு நாளும் அறிக்கை விட்டதில்லை இந்த உலக சுகாதார மையம்.
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
30-டிச-202118:48:45 IST Report Abuse
N.K இந்த அமைப்பையும் இதன் அறிக்கைகளையும் இனியும் உலகில் எந்த நாடும் எவரும் மதிக்கப்போவதில்லை. அவரவர் அவர்களது இஷ்டப்படியே இருப்பார்கள்.
Rate this:
Cancel
raja - Doha,கத்தார்
30-டிச-202118:48:31 IST Report Abuse
raja இந்த நபரால்தான் உலகெங்கும் கோவிட் பரவியது.........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X