'சட்'டென இருண்டது வானம்: ‛கொட்'டென கொட்டியது மழை: சென்னையில் மேகவெடிப்பு?

Updated : டிச 31, 2021 | Added : டிச 30, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: சென்னையில் பல பகுதிகளில் திடீரென 3 மணிநேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. நவம்பர் மாதம் முழுவதும் பருவமழை கொட்டித்தீர்த்தது. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது. பருவமழை
Chennai, Heavy Rain, Chennai Rains, சென்னை, கனமழை, மழை

சென்னை: சென்னையில் பல பகுதிகளில் திடீரென 3 மணிநேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. நவம்பர் மாதம் முழுவதும் பருவமழை கொட்டித்தீர்த்தது. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது. பருவமழை முடிவடைந்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவி வந்தது.


latest tamil news


இந்நிலையில் சென்னையில் கடந்த 3 மணிநேரத்திற்கு மேலாக திடீரென மழை பெய்தது. சென்னை தி.நகர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மதுராந்தகம், வாலாஜா சாலை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால், சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


மேகவெடிப்பு?

இது குறித்து தமிழக வெதர்மேன் கூறும்போது, ‛சென்னையில் திடீரென எதிர்பாராத விதமாக பெய்த மழையை பார்க்கும்போது இது கிட்டத்தட்ட மேகவெடிப்பு போல இருக்கலாம் என கருத வேண்டியுள்ளது. பல இடங்களில் மழையின் அளவு 100 மி.மீட்டரை தாண்டலாம்,' எனக் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-டிச-202106:24:49 IST Report Abuse
ராஜா அக்கிரமம் பெருகினால் இயற்கை இப்படித்தான் பதில் சொல்லும்.
Rate this:
Cancel
mrrame - madras,ஆப்கானிஸ்தான்
31-டிச-202100:17:48 IST Report Abuse
mrrame எத்தனை முறை சென்னை வெள்ளம் வந்தாலும் அதற்கு நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம்...
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
30-டிச-202119:18:57 IST Report Abuse
Bhaskaran Munbellam vaara ithalkalil joke poduvaargal papering malaivaruthunnu potirunthaal thuninju vadaam kaayavaikalaamnu .ippo thulliyamaaga solraanga aanaal athayum meeri malaipeithaal local condition appadeennu solliduvaanga
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X