மயிலாப்பூரில் வெளுத்து வாங்கிய 20 செ.மீ., மழை

Updated : டிச 30, 2021 | Added : டிச 30, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: சென்னையில் திடீரென வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. மயிலாப்பூரில் இன்று (டிச.,30) ஒரே நாளில் 200 மி.மீ (20 செ.மீ)-க்கு மழை பதிவாகியுள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வந்த சூழலில், சென்னையில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 4 மணிநேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் பல இடங்கள் குளம் போல் காட்சியளித்தன. சென்னை தலைமை செயலகத்திற்கு உள்ளும்
Chennai Rains, Mylapore, Rainfall, Heavy Rain, சென்னை, கனமழை, மயிலாப்பூர், மழைப்பதிவு

சென்னை: சென்னையில் திடீரென வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. மயிலாப்பூரில் இன்று (டிச.,30) ஒரே நாளில் 200 மி.மீ (20 செ.மீ)-க்கு மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வந்த சூழலில், சென்னையில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 4 மணிநேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் பல இடங்கள் குளம் போல் காட்சியளித்தன. சென்னை தலைமை செயலகத்திற்கு உள்ளும் மழைநீர் புகுந்தது. அறைகளுக்குள் நீர் புகுந்ததால், ஊழியர்கள் வெளியேறினர். அண்ணா மேம்பாலத்தில் கனமழையால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


latest tamil news


மயிலாப்பூரில் காலையில் வெயில் சுட்டெறித்த நிலையில், மதியத்திற்கு மேல் மழை கொட்டியது. அங்கு இன்று ஒரேநாளில் மட்டும் 20 செ.மீ.,க்கு மேலாக மழைப் பெய்துள்ளது. மயிலாப்பூரில் ஒரு நாளில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும். இன்னும் மழை பெய்துக்கொண்டிருப்பதால் இதன் அளவு மேலும் அதிகரிக்கலாம்.

அதேபோல், நுங்கம்பாக்கத்தில் இந்தாண்டில் (2021) மட்டும் மாலை 5:30 மணி நிலவரப்படி 2174 மி.மீ மழைப்பதிவாகியுள்ளது. அங்கு ஓராண்டில் பெய்த அதிகபட்ச மழையில் இது 3வது மிகப்பெரிய பதிவாகும். 2005ல் அதிகபட்சமக 2005ல் 2,566 மி.மீ மழையும், 1996ல் 2,451 மழையும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
31-டிச-202102:56:47 IST Report Abuse
Ramesh Sargam ஒருவேளை அந்த குறிப்பிட்ட 35.37 லட்சம் 'தகுதி' இழந்த மக்கள், அந்த கோபாலபுரம் குடும்பத்து ...னால், "தகுதி உடையவர்கள்" ஆகிவிடுவார்களோ..? ஆக, தகுதி இழந்த மக்களே கிளம்புங்கள் ...
Rate this:
Cancel
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
30-டிச-202119:17:44 IST Report Abuse
Sathyanarayanan Bhimarao கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான் மழை பெய்யும் சப்ததைக் கேட்டு எட்டிப் பார்த்து பிரமித்து விட்டேன், மார்கழி மாதத்தில் குளிர்தான் அடிக்கும் . அடை மழை பெய்த அதிசய்த்தை இன்றுதான் பார்த்தேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X