சென்னை: சென்னையில் திடீரென வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. மயிலாப்பூரில் இன்று (டிச.,30) ஒரே நாளில் 200 மி.மீ (20 செ.மீ)-க்கு மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வந்த சூழலில், சென்னையில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 4 மணிநேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் பல இடங்கள் குளம் போல் காட்சியளித்தன. சென்னை தலைமை செயலகத்திற்கு உள்ளும் மழைநீர் புகுந்தது. அறைகளுக்குள் நீர் புகுந்ததால், ஊழியர்கள் வெளியேறினர். அண்ணா மேம்பாலத்தில் கனமழையால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மயிலாப்பூரில் காலையில் வெயில் சுட்டெறித்த நிலையில், மதியத்திற்கு மேல் மழை கொட்டியது. அங்கு இன்று ஒரேநாளில் மட்டும் 20 செ.மீ.,க்கு மேலாக மழைப் பெய்துள்ளது. மயிலாப்பூரில் ஒரு நாளில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும். இன்னும் மழை பெய்துக்கொண்டிருப்பதால் இதன் அளவு மேலும் அதிகரிக்கலாம்.
அதேபோல், நுங்கம்பாக்கத்தில் இந்தாண்டில் (2021) மட்டும் மாலை 5:30 மணி நிலவரப்படி 2174 மி.மீ மழைப்பதிவாகியுள்ளது. அங்கு ஓராண்டில் பெய்த அதிகபட்ச மழையில் இது 3வது மிகப்பெரிய பதிவாகும். 2005ல் அதிகபட்சமக 2005ல் 2,566 மி.மீ மழையும், 1996ல் 2,451 மழையும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE