'பல கட்சிகளுக்கு 'அட்ரஸ்' இருக்காது!'
பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் பேசிய, 'மனதின் குரல்' நிகழ்ச்சி, சென்னை அடையாறில் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டது.அதில் பங்கேற்ற பின், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நிருபர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், 'தமிழகத்தில் சில கட்சிகளுக்கு வேலையே இல்லை... இன்னொரு கட்சியின் சின்னத்தில் நின்றால் தான், அந்த கட்சிகளுக்கு உயிரே... அந்த கட்சிகள், தி.மு.க., என்ற கட்டுமரத்தை கெட்டியாக பிடித்தபடி கடலில் சென்று, தத்தளித்து தப்பித்து விடலாம் என்று நினைக்கின்றன...' என்றார்.
இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'தி.மு.க., கூட்டணியில, 'சிண்டு' முடியுற வேலை செய்யுறாரோ... ஆனாலும், இவர் சொல்லுறது சரி தான்... தி.மு.க., மட்டும் இடம் கொடுக்கலைன்னா, பல கட்சிகளுக்கு, 'அட்ரஸ்' இருக்காது...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE