சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

மிரட்டலால் அலறும் சினிமா துறையினர்!

Added : டிச 30, 2021 | கருத்துகள் (1)
Advertisement
மிரட்டலால் அலறும் சினிமா துறையினர்!''இவா வேற, அப்பப்போ காமெடி பண்ணின்டு இருக்கா ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.நாயர் கொடுத்த இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''யாரைச் சொல்றீங்க... ஆரம்பமே நல்லா இருக்கு...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''திருப்பூர் ம.தி.மு.க., மாவட்ட செயலர் நாகராஜ், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலர் இல்லையாம்... பொறுப்பாளரா


டீ கடை பெஞ்ச்


மிரட்டலால் அலறும் சினிமா துறையினர்!


''இவா வேற, அப்பப்போ காமெடி பண்ணின்டு இருக்கா ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.நாயர் கொடுத்த இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''யாரைச் சொல்றீங்க... ஆரம்பமே நல்லா இருக்கு...''
எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''திருப்பூர் ம.தி.மு.க., மாவட்ட செயலர் நாகராஜ், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலர் இல்லையாம்... பொறுப்பாளரா நியமிக்கப்பட்டவராம்...

''அவருடைய, 'லெட்டர் பேட்'ல, மறைந்த திராவிட தலைவர்களான ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை படமெல்லாம் இல்லையாம்... ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, அவருடைய மகன் துரை படங்கள் தான்
இருக்காம் ஓய்...

''இதனால சிலர், 'ம.தி.மு.க., திராவிட இயக்கம் இல்லை... இதுவும் குடும்ப கட்சியா மாறிடுத்து'ன்னு சமூக வலைதளத்துல புலம்பிண்டு இருக்கா... பதிலுக்கு, துரை ஆதரவாளர்கள், 'எதிரி, துரோகி'ன்னு பதிவு போட்டுண்டு இருக்கா ஓய்... அதைப் பார்த்து தான் காமெடின்னு சொன்னேன்...'' என விளக்கினார், குப்பண்ணா.

''தமிழகத்துக்கு வரும் மோடி, பொங்கல் வைப்பாரான்னு யோசிக்கிறாங்க பா...'' என அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''என்ன, ஏதுன்னு விபரமாக சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தமிழகத்துல, 11 மருத்துவ கல்லுாரிகளை துவக்க மத்திய அரசு அனுமதி அளிச்சது... இதை துவக்கி வைக்கறதுக்கு, ஜன., 12ல் பிரதமர் மோடியை, விருதுநகருக்கு அழைச்சுட்டு வர ஏற்பாடு நடக்குது பா...

''இதை பயன்படுத்தி, மதுரைக்கு பிரதமர் மோடியை அழைச்சு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த, பா.ஜ., திட்டம் போடுது பா...

''அப்போது, 10 ஆயிரத்து எட்டு பொங்கல் பானைகள் வைத்து, 'தாமரை பொங்கல்' என்ற பெயரில் விழா நடத்தி, 'கெத்து' காட்டணுமுன்னு நினைக்கிறாங்க பா...

''இதுக்கு பிரதமர் மோடி தரப்புல இருந்து, 'பச்சை' கொடி காட்டப்படுமான்னு தெரியலை பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''கொரோனாவா இருக்கே... வருவாரா வே...'' என சந்தேகம் கிளப்பிய அண்ணாச்சியே, கடைசி தகவலைச் சொல்ல ஆரம்பித்தார்...

''கடந்த தி.மு.க., ஆட்சி நடந்த, 2006 - 2011ல, சினிமா துறையை ஆளுங்கட்சியினர் கபளீகரம் செய்ததை மறக்க முடியுமா வே...'' என்ற அண்ணாச்சியிடம், ''இப்போ அதுக்கு என்ன ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்குற, 'சூரியன் டிவி சேனல்' நிர்வாகமும், பெரிய இடத்திற்கு சொந்தமான, 'சிவப்பு' சினிமா கம்பெனியையும் சேர்ந்து, அடாவடியில ஈடுபட ஆரம்பிச்சுட்டாவ வே...

''பிரபல நடிகர், இயக்குனரின் படங்களை, 'அன்பாக' மிரட்டியே, கொறஞ்ச விலைக்கு, சூரியனும், சிவப்பும் சேர்ந்து வாங்கி வெளியிடுதாம் வே...

''சமீபத்துல வெளியான, புஷ்பம் படத்தை அப்படி மிரட்டி தான் வாங்கியிருக்காவ... தொடர்ந்து, தமிழ்ல வெளியாக இருக்குற எல்லா படங்களையும் கேட்டு நச்சரிக்காவ வே...

''இதனால, 'மீண்டும் கடந்த கால தி.மு.க., ஆட்சியே நடக்குதே'ன்னு சினிமா தயாரிப்பாளர்கள் எல்லாம், 'நொந்து நுாடுல்ஸ்'
ஆகுறாவ...

''பத்து ஆண்டு கால, அ.தி.மு.க., ஆட்சியில இப்படி எந்த பிரச்னையையும் சந்திக்கலை... தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஆறே மாசத்துல அடாவடியை ஆரம்பிச்சுட்டாங்கன்னு சினிமா வட்டாரம் புலம்புது வே...'' என முடித்தார், அண்ணாச்சி.''தி.மு.க., ஆட்சிக்கு வரணுமுன்னு, அவங்க தானே ரொம்ப ஆசைப்பட்டாங்க...'' என்றபடியே அந்தோணிசாமி கிளம்ப, நண்பர்களும் நடையை கட்டினர்; பெஞ்ச் அமைதியானது!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Chennai,இந்தியா
31-டிச-202116:53:35 IST Report Abuse
Rajagopal எவ்ளோ பட்டாலும் தமிழனுக்கு புத்தி வரப்போறதில்லே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X