25 போர் விமானங்களை சீனாவிடம் வாங்கும் பாக்.,

Updated : டிச 31, 2021 | Added : டிச 30, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
இஸ்லாமாபாத்:இந்தியா வாங்கியுள்ள 'ரபேல்' போர் விமானத்திற்கு போட்டியாக, சீனாவிடம் இருந்து 25 போர் விமானங்களை பாக்., வாங்குகிறது.ஐந்தாண்டுகளுக்கு முன் பிரான்சிடம் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 36 'ரபேல்' போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதனால் இந்திய விமானப்படை கூடுதல் பலம் பெற்றுள்ளது. இந்நிலையில் ரபேலுக்கு போட்டியாக சீனாவிடம் இருந்து 'ஜே -10சி'
 25 போர் விமானங்களை சீனாவிடம் வாங்கும் பாக்.,

இஸ்லாமாபாத்:இந்தியா வாங்கியுள்ள 'ரபேல்' போர் விமானத்திற்கு போட்டியாக, சீனாவிடம் இருந்து 25 போர் விமானங்களை பாக்., வாங்குகிறது.
ஐந்தாண்டுகளுக்கு முன் பிரான்சிடம் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 36 'ரபேல்' போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதனால் இந்திய விமானப்படை கூடுதல் பலம் பெற்றுள்ளது. இந்நிலையில் ரபேலுக்கு போட்டியாக சீனாவிடம் இருந்து 'ஜே -10சி' போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்க உள்ளது.

இது குறித்து பாக்., உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கூறியதாவது:சீனாவிடம் இருந்து அனைத்து தட்பவெப்ப நிலையிலும் செயல்படும் ஆற்றல் உள்ள 25 'ஜே - 10சி' போர் விமானங்களை வாங்க உள்ளோம். 2022 மார்ச் 23ல் பாக்., தின விழா நடக்க உள்ளது. அப்போது நடக்கும் அணிவகுப்பில் இந்த விமானங்கள் பங்கேற்கும். ரபேலுக்கு போட்டியாக விளங்கும் இந்த விமானங்களின் சாகச காட்சியை பார்த்து ரசிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
01-ஜன-202205:39:46 IST Report Abuse
மலரின் மகள் ரபேல் விமானங்களின் தனிச்சிறப்பு என்பது செங்குத்தாக கீழிறங்குவதும். மேலேறுவதும் மணிக்கு மூவாயிரம் கி மீ வேகத்தில் பறந்து கொண்டே துல்லியமாக ஏவுகணைகளை வீசி தாக்குவதும், ரேடார் கண்ணில் படமால் ரேடாருக்கு அருகிலேயே பறந்து சென்று ரேடாரையும் அழிக்கவல்லதும், ரேடார் கதிர்களை பிரதிபலிக்காமல் அதை தன்னகத்தே உட்கிரத்து கொள்வதும் அல்லது அவற்றை பெற்று செல்லும் திசையிலேயேஊடுருவி வளியேற செல்வதுமாக அதன் மேற்பரப்பு தகடுகள் உள்ளது. அதனால் ரேடார் கதிர்கள் பிரதிபலித்து ரேடார் கருவிக்கு தகவல்களை சொல்ல இயலாது. மேலும் இந்திரன் பலடி சந்திரன் பலடி என்று சொல்வதைப்போல எந்த திசையிலும் எப்போதுவேண்டுமானாலும் மாறி மாறி செல்வதும் பல்டி அடிப்பதுமாக இருக்கிறது. மிக குறைந்த உயரத்தில் கூட தொடர்ந்து பறக்க வல்லது. விமானங்களால் குறைந்த உயரத்தில் பறக்க இயலாது என்பதும் மேலும் அதற்கு எரிபொருள் மிக அதிகம் செலவாகும் என்பதும் அனைவருக்கும் தெரியும். குறைந்த உயரத்தில் பறந்தால் எளிதில் எதிரியின் ரேடார் போன்ற கண்காணிப்பிலிருந்து தப்பி சென்று இலக்கை தாக்க இயலும். இஸ்ரேல் தன்னை எதிர்த்த ஆறுநாடுகள் அரபு கூட்டணியை வென்றதும் மேலும் அவர்களின் த்வஜமானத்தை கடத்திய கடத்தல் தேசத்தின் விமான தளத்தை போர் விமானங்கள் சுக்கு நூறாக்கி திரும்பியதும் இது அனைத்தும் பல ஆயிரம் கி மீ தூரங்கள் எதிரி நாட்டின் வான் எல்லையில் அவர்களுக்கு தெரியாமல் சென்று தாக்கி திரும்பி வந்ததும் இந்த குறைந்த உயரபறக்கும் திறனால் தான். அத்தகைய திறன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது ரபேல் விமானத்தில். மேலும் நமக்கு பொதுவாக தேவைப்படுவது இமயமலையில் அனைத்து கால சூழல் களிலும் செயலாற்ற வேண்டிய போர் விமானம் அதுவும் ரபேல் தான். நம்முடைய எதிரிகள் வடக்கு எல்லையில் இருக்கிறார்கள் அவர்களை விட திறைமையானவர்களாக நமது விமான படை இருக்கிறது, அதனால் அவர்களுக்கு அச்சுறுத்தல்கல் இருப்பதால் அவர்கள் வாலை சுருட்டி வைத்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு எவ்வளவு தெரிகிறதோ ரெபேலை பற்றிய தகவல்கள் அதைவிட பன்மடங்கு சீனனுக்கும் அந்த கூண்னுக்கும் அறிந்து அச்சமிருக்கிறது. அதனால் தான் அவர்கள் பலரையும் தூண்டி விட்டு ரபேலை இந்தியா வாங்காமல் இருப்பதற்கு பல்வேறு வகைகளை கையாண்டார்கள், அனைத்தும் தவிடு பொடியாகி விட்டது. ஊழல் என்ற ஒரு அஸ்திரத்தை கையிலெடுத்தவர்களுக்கு மோடிக்கு எதிராக ஊழலால் குற்றசாட்டை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொள்வதற்கு ஒரு வழியாக அது அமைந்தது அவ்வளவே. மேலும் ஒவ்வொரு முறையும் போரில் கலந்து கொண்டு திரும்பும் விமானத்தை உடனடியாக மெயின்டெனன்ஸ் செய்யவேணும். அது மிக குருகிய காலத்தில் ரபேலில் செய்யலாம். விமானம் திரும்பிய இரண்டு மணி நேரத்திற்குள்ளாக அடுத்த தாக்குதலுக்கு முழுமையாக தயாராகிவிடும் என்பது வேறு எந்த போர்விமானத்திற்கும் இல்லாத தனி சிறப்பு. முத்தாய்ப்பாக ஒன்றை அறிந்து கொள்ளலாம். ரபேல் யுத்தத்தில் பலமுறை பங்கேற்று தன்னை சிறப்பை மேய்ப்படுத்தி காட்டியிருக்கிறது. இது போன்ற நேரடி யுத்தத்தில் சீனாவின் விமானங்கள் இதுவரையில் கலந்து கொண்டு அதன் திறனை காட்டவில்லை. ரபேலுடுன் முழுமையான ஆயுதங்களை பிரான்ஸ் தந்திருக்கிறது நமக்கு. மேலும் ரபேலிலில் நமது அக்கினி பிரமோஸ் போன்ற ஏவுகணைகளையும் பொருத்தி ஏவலாம். இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான தொழில் நுட்பங்கள் தரப்படுகிறது. கூட்டு தயாரிப்பு ஆரம்பமாகிறது. இன்னும் 116 விமானங்கள் இங்கே தயாரிக்க பட்டு விமானப்படையில் இணையவிப்பிருக்கிறது. அனைத்தையும் கணக்கிட்டு தான் உலகம் சொல்கிறது, இந்தியா உலகின் ராணுவ வல்லரசு என்று. 2030 ல் உலகின் இரண்டாமிடத்திற்கும் 2050 ல் ராணுவ வலிமையில் முதலிடத்திற்கு செல்லும் என்றும் உலகம் நிச்சயமாக சொல்கிறது. பெருமை கொள்வோம். நாம்.
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
31-டிச-202106:35:56 IST Report Abuse
John Miller ரஃபேல் விமானங்கள் சாதாரணமானவை இல்லை. ராஜ்நாத் சிங் நேராக பிரான்ஸ்சிற்கு சென்று விமானத்தின் மூக்கில் எலுமிச்சை பழத்தை குத்தி, கற்பூரம் காட்டி, மந்திரம் சொல்லி மிகவும் சக்தி வாய்ந்தாக மாற்றி இருக்கின்றார். நீங்கள் 100 அல்ல ஆயிரம் விமானங்களை வாங்கினாலும் எங்கள் ரஃபேல் எதிரில் நிற்க முடியாது.
Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
01-ஜன-202205:55:27 IST Report Abuse
மலரின் மகள்சைரோ மலபார் கிருத்துவ கல்வி நிறுவங்களின் பல முறை பார்த்திருக்கிறேன். அவர்கள் துவங்கும் எந்த ஒரு கட்டிடங்கள், விளையாட்டரங்கங்கள், கலையரங்கங்கள் என்று எதிலும் முதலில் அவர்களின் பிஷப் வந்து சிறப்பு பிரார்த்தனை செய்வார். கட்டிட திறப்பின் போதும் மிகவும் சிறப்பாக வழிபாடுகள் இருக்கும். குறைந்தது மூன்று நான்கு மணிநேரம் கூட ஆகும். நம்மை போலத்தான் அவர்களின் நம்பிக்கையும். நாம் தண்டம் என்ற ஒன்றை வைத்திருந்தால் அவர்கள் சிலுவை வைத்திருந்து அதை வைத்து செய்கிறார்கள் நறுமணங்கள் புகைகள் உண்டு. அதுமட்டுமா, கிரகப்பிரவேசமும் உண்டு. பணக்காரர்களின் வீடுகளில் கிரகப்பிரவேசத்திற்கு அவர்களின் செல்வாக்கிற்கு தகுந்தபடி ஒரு பாதரோ அல்லது ரெவெரென்ட், ரைட் ரெவரென்ட், வெரி ரைட் ரெவெரென்ட் என்று வருவார்கள், மிகவும் செல்வாக்கிருந்தால் பிஷப், ஆர்ச் பிஷப் வந்து கிரகப்பிரவேசத்தை கூடசிறப்பாக செய்து தருவார்கள். கேரளாவில் திருச்சூரில் சென்று பாருங்கள் தெரியும். நமது ராணுவ மந்திரி செய்தது, நாங்கள் எங்கள் மதத்தில் நம்பிக்கையை முழுமையாக வைத்திருக்கிறோம். அதை வெளியுலகத்திற்கு சொல்வதில் எங்களுக்கு எந்த இடர்பாடும் இல்லை என்பதே. முன்னவர்கள் அப்படி அல்ல. தயக்கம். ஓட்டுக்களுக்காக மட்டுமே அரசு என்று இருக்கக்கூடாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X