நாயை இழுத்துச் சென்ற சிறுத்தையால் திக்...திக்...!

Added : டிச 31, 2021 | |
Advertisement
கோவை:இரவில், கல்லூரி வளாகத்தில் புகுந்த சிறுத்தை, நாயை வேட்டையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சுகுணாபுரம் தன்னாசியப்பன் கோவில் வீதியில் இரு வாரங்களுக்கு முன், சிறுத்தை ஒன்று நடமாடியது. தகவலறிந்த மதுக்கரை வனத்துறையினர், அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.இந்நிலையில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்

கோவை:இரவில், கல்லூரி வளாகத்தில் புகுந்த சிறுத்தை, நாயை வேட்டையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சுகுணாபுரம் தன்னாசியப்பன் கோவில் வீதியில் இரு வாரங்களுக்கு முன், சிறுத்தை ஒன்று நடமாடியது. தகவலறிந்த மதுக்கரை வனத்துறையினர், அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.இந்நிலையில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சிறுத்தை உலவியது, கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதில் சிறுத்தை, நாய் ஒன்றை கடித்து இழுத்து செல்வது பதிவாகியிருந்தது.தொடர்ந்து அப்பகுதியில் நாயின் சடலத்தையும் போட்டு சென்றுள்ளது. சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X