கிணத்துக்கடவு:குடிபோதையில், எதிரே வந்த வாகனத்தின் மீது மோதிய விபத்தில், பெண் பலியான வழக்கில், கொலை அல்லாத மரணத்தை விளைவிக்கும் பிரிவின் கீழ், வாலிபர் கைது செய்யப்படார்.கிணத்துக்கடவு, சூலக்கல்லை சேர்ந்த சதீஷ்குமாரின் மனைவி மைதிலி, 29. நேற்று முன்தினம் மாலை, எஸ்.மேட்டுப்பாளையத்தில் இருந்து, அரண்மனைபுதுார் நோக்கி, 'டியோ' வாகனத்தில், 80 வயது பாட்டி முத்தம்மாளுடன் சென்றார்.அரண்மனைபுதுார் அருகே சென்ற போது, தேவராயபுரத்தை சேர்ந்த ஸ்டாலின் செல்வின்ராஜா, 30, குடிபோதையில், விபத்தை ஏற்படுத்தும் வகையில், வேகமாக பைக்கை ஓட்டி வந்து, நேருக்கு நேர் மோதினார். விபத்தில், தலையில் படுகாயமடைந்த மைதிலி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த முத்தம்மாள், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.எஸ்.பி., செல்வநாகரத்தினம் உத்தரவில், கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ., அருள்பிரசாத் ஆகியோர் விசாரித்து, ஸ்டாலின் செல்வின்ராஜா மீது, கொலை குற்றம் ஆகாத மரணம் விளைவிக்கும் செயல், '304ஏ' பிரிவின் கீழ், வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.குடிபோதையில் வாகனம் ஓட்டி, விபத்த ஏற்படுத்தினாலோ, மரணத்தை விளைவித்தாலோ, கைது செய்யப்படும் நபர் மீது, இதுபோன்ற கடுமையான நடவடிக்கை தொடரும் என, எஸ்.பி., செல்வநாரத்தினம் எச்சரிக்கை விடுத்தார்.ஸ்டாலின் செல்வின்ராஜா