இன்றிரவு ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவோருக்கு எச்சரிக்கை! தேவையின்றி வாகனங்களில் சுற்றி வந்தால் பறிமுதல்

Added : டிச 31, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
மதுரை : ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக இன்றிரவு(டிச.,31) தேவையின்றி வாகனங்களில் சுற்றி வந்தால் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மதுரை நகரில் பாதுகாப்பு பணிக்காக கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்ஹா மற்றும் துணைகமிஷனர்கள் தங்கத்துரை, ராஜசேகரன் தலைமையில்
இன்றிரவு ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவோருக்கு எச்சரிக்கை! தேவையின்றி வாகனங்களில் சுற்றி வந்தால் பறிமுதல்

மதுரை : ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக இன்றிரவு(டிச.,31) தேவையின்றி வாகனங்களில் சுற்றி வந்தால் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மதுரை நகரில் பாதுகாப்பு பணிக்காக கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்ஹா மற்றும் துணைகமிஷனர்கள் தங்கத்துரை, ராஜசேகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் கூறியதாவது: வாகனங்களில் தேவையின்றி சுற்றக்கூடாது. மீறி சுற்றி வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். ரோட்டில் கூடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் கேக் வெட்டி கொண்டாடக்கூடாது. டூவீலர்களை அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் ஓட்டக்கூடாது. பைக் ரேஸ் கூடாது. மது அருந்தி வாகனம் ஓட்டினால் கைது செய்யப்படுவர்.

டூவீலர் புகைபோக்கியை அதிக சத்தத்துடன் ஓட்டும் வகையில் மாற்றி அமைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும். வெளியூர் செல்வோர் போலீசிற்கு தகவல் தெரிவித்தால், அவர்களின் வீடுகளை ரோந்து போலீசார் கண்காணிப்பர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அவரவர் வீடுகளில் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்றனர்.

இதற்கிடையே மதுரை நகரில் திருடுபோன ரூ.15 லட்சம் மதிப்புள்ள 120 அலைபேசிகள் மற்றும் ஒரு லேப்டாப் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.


எஸ்.பி., அறிவிப்பு


மதுரை மாவட்டத்திலும் இதே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி., பாஸ்கரன் தெரிவித்துள்ளார். அவசர உதவி தேவைப்பட்டால் 100, 112ல் தொடர்பு கொள்ளலாம். காவலன் எஸ்.ஓ.எஸ்., செயலியை பயன்படுத்தி உதவி பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
31-டிச-202107:53:15 IST Report Abuse
Ram இவர்கள் கொராணா பரவளின்போது தேர்தல் நடத்துவார்கள் ஆனால் மக்கள் கொண்டாட்டத்தின்போது தடை போடுவார்கள் .... இது மக்களாட்சியா , இல்லை விடியா ஆட்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X