நம்பிக்கை துரோகத்தின் உச்சம்: பன்னீர்செல்வம் ஆவேசம்

Added : டிச 31, 2021 | கருத்துகள் (20)
Advertisement
சென்னை : 'தேர்தல் வாக்குறுதிப்படி, அனைவரின் நகைக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:'ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்' என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இன்று நகைக் கடன் வாங்கியோரில், 75 சதவீதம்
ADMK,Panneerselvam,OPS,அதிமுக,பன்னீர்செல்வம்

சென்னை : 'தேர்தல் வாக்குறுதிப்படி, அனைவரின் நகைக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.



அவரது அறிக்கை:'ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்' என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இன்று நகைக் கடன் வாங்கியோரில், 75 சதவீதம் கடனாளிகளுக்கு தள்ளுபடி கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது.


latest tamil news



அரசு அறிக்கையில், 'ஏற்கனவே பெறப்பட்ட 48 லட்சத்து 84 ஆயிரத்து 726 பயனாளிகளின் விபரங்களை பகுப்பாய்வு செய்ததில், 35 லட்சத்து 37 ஆயிரத்து 693 கடனாளிகள் தள்ளுபடி பெற தகுதி இல்லாதவர்கள்' என்று கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால், வெறும் 13 லட்சத்து 47 ஆயிரத்து 33 பேர் மட்டுமே தகுதியானவர்கள். இதற்கு முன் 16 லட்சம் பயனாளிகள் என்றனர்; அதிலும் 2.50 லட்சம் குறைந்து விட்டது.

நகைக் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு, 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை கடனாளிகளாக மாற்றியுள்ளது. இதற்கு தி.மு.க., தான் காரணம். இந்த செயல் நம்பிக்கை துரோகத்தின் உச்சகட்டம். எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி நகைக் கடனை தள்ளுபடி செய்து, கடன் சுமையில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். இவ்வாறு பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - Doha,கத்தார்
01-ஜன-202218:27:00 IST Report Abuse
periasamy இந்த தள்ளுபடி இலவசம் இதையெல்லாம் கொடுக்கவே கூடாதென்ற சட்டம் கொண்டுவர வேண்டும் இதனால் தமிழர்கள் பொறுப்பற்ற மக்களாக மாறிவிட்டார்கள்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
31-டிச-202111:38:37 IST Report Abuse
duruvasar பொங்கல் பரிசு 5000 ரூபாய் அளிக்கப்படும் என்று மகளிர் அணி தலைவர் கூறியிருந்தார். அவர் சாராய ஆலைகளை போராடி வெற்றிகரமாக மூடியதுபோல் இதையும் முடிப்பார்.
Rate this:
Cancel
Muthuraj Richard - Coimbatore,இந்தியா
31-டிச-202110:43:03 IST Report Abuse
Muthuraj Richard ராஜேந்திர பாலாஜியை கொண்டு வந்து போலீஸ் வசம் ஒப்படைத்து விட்டு என்ன எப்படி வேண்டுமானாலும் உணருங்கள் பன்னீர் சார்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
01-ஜன-202215:25:33 IST Report Abuse
meenakshisundaramமொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடற வேலை இது ?ராஜேந்திர பாலாஜிக்கு குரு செந்தில் பாலாஜி எப்படி நம்ம தல அதிமுக லே ஓரம் கட்டப்பட்டவனை ரொம்ப உபயோகமாக மாற்றிட்டாரு ?-இது தான் 'ஸ்டாலின் வரபோர்ராரு ,விடியல் தரப்போறாரு ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X