விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தஆண்டைவிட இந்தாண்டு சாலை விபத்து மற்றும் போக்சோ வழக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 39 சட்டம், ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், நான்கு மகளிர் போலீஸ் நிலையங்கள், டிராபிக் மற்றும் கலால் போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த போலீஸ் நிலைய பகுதிகளில் இந்தாண்டு நடந்த குற்றச்சம்பவங்கள் தொடர்பான பட்டியலை எஸ்.பி., ஸ்ரீநாதா வெளியிட்டுள்ளார்.அதில், ஆதாய கொலை கடந்த 2020ம் ஆண்டு மற்றும் இந்தாண்டு தலா 2, மோசடி வழக்குகள் கடந்த ஆண்டு 10, இந்தாண்டு 4, கொள்ளை கடந்த ஆண்டு 31, இந்தாண்டு 54, திருட்டு கடந்த ஆண்டு 129, இந்தாண்டு 229, கொலை கடந்த ஆண்டு 43, இந்தாண்டு 23 நடந்துள்ளது.இதேபோன்று, கொலை முயற்சி கடந்த ஆண்டு 95, இந்தாண்டு 88, கற்பழிப்பு கடந்த ஆண்டு 21, இந்தாண்டு 19, வரதட்சணை இறப்பு கடந்த ஆண்டு 2, இந்தாண்டு 1, பெண்கள் கடத்தல் கடந்த ஆண்டு 68, இந்தாண்டு 39 நடந்துள்ளது.மேலும், உயிரிழப்பு ஏற்படுத்திய வழக்குகள் கடந்த ஆண்டு 420, இந்தாண்டு 430, இந்த விபத்துகளில் கடந்த ஆண்டு 438 பேரும், இந்தாண்டு 442 பேரும் இறந்துள்ளனர்.இதேபோன்று, உயிரிழப்பின்றி காயங்கள் ஏற்படுத்திய வழக்குகள் கடந்த ஆண்டு 1,506, இந்தாண்டு 1,616. இதில், கடந்த ஆண்டு 2,087 பேரும், இந்தாண்டு 1,902 பேரும் காயமடைந்துள்ளனர்.இதைத் தவிர்த்து ஐ.பி.சி., சட்டப்பிரிவின் கீழ் கடந்த ஆண்டு 1,747 வழக்குகளும், இந்தாண்டு 1,354 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதேபோன்று, ஆயுதம் வைத்திருந்ததாக கடந்த ஆண்டு மற்றும் இந்தாண்டு தலா 5 வழக்குகளும், கஞ்சா வழக்குகள் கடந்த ஆண்டு 55, இந்தாண்டு 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.குட்கா வழக்குகள் கடந்த ஆண்டு 926, இந்தாண்டு 661, சூதாட்ட வழக்கு கடந்த ஆண்டு 151, இந்தாண்டு 71, மதுவிலக்கு வழக்குகள் கடந்த ஆண்டு 5,596, இந்தாண்டு 4,147 பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், வெடி பொருட்கள் வழக்குகள் கடந்த ஆண்டு 10, இந்தாண்டு 21, குழந்தை திருமணம் வழக்குகள் கடந்த ஆண்டு மற்றும் இந்தாண்டு தலா 6 பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, மணல் கடத்தல் வழக்குகள் கடந்த ஆண்டு 780, இந்தாண்டு 289, பொது சொத்திற்கு சேதப்படுத்திய வழக்குகள் கடந்த ஆண்டு 32, இந்தாண்டு 23, அதிக வட்டி வசூலித்ததாக கடந்த ஆண்டு 2, இந்தாண்டு 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றதாக கடந்த ஆண்டு 107, இந்தாண்டு 82 வழக்குகள், போக்சோ கற்பழிப்பு வழக்குகள் கடந்த ஆண்டு 81, இந்தாண்டு 85 மற்றும் மற்ற போக்சோ வழக்குகள் கடந்த ஆண்டு 13, இந்தாண்டு 31 மற்றும் ஐ.பி.சி., பிரிவுகளில் வராத சிறப்பு பிரிவுகளில் உள்ள விபசாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கடந்த ஆண்டு 40,325, இந்தாண்டு 4,590 பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், தடுப்புக் காவலில் கடந்த ஆண்டு 26, இந்தாண்டு 28 பேரும், குண்டர் சட்டத்தில் கடந்த ஆண்டு 27, இந்தாண்டு 37 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோன்று, பல்வேறு வழக்குகளில் கடந்த ஆண்டு 2 கோடியே 63 லட்சத்து 20 ஆயிரத்து 346 ரூபாய், இந்தாண்டு 3 கோடியே 45 லட்சத்து 7 ஆயிரத்து 605 ரூபாய் இழப்பு ஏற்பட்டது.இதில், கடந்த ஆண்டு 1 கோடியே 80 லட்சத்து 25 ஆயிரத்து 204 ரூபாயும், இந்தாண்டு 1 கோடியே 82 லட்சத்து 98 ஆயிரத்து 801 ரூபாய் கைப்பற்றப்பட்டது. மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு விபத்து மற்றும் போக்சோ வழக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE