போக்சோவில் தண்டனை பெற்றோர்...16 பேர்; கடலூர் மாவட்ட போலீசார் அதிரடி| Dinamalar

'போக்சோ'வில் தண்டனை பெற்றோர்...16 பேர்; கடலூர் மாவட்ட போலீசார் அதிரடி

Added : டிச 31, 2021 | |
கடலுார் மாவட்டத்தில், கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி உள்ளிட்ட ஏழு காவல் உட்கோட்டங்கள் உள்ளன.இதில், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் 6, சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் 46, மது விலக்கு அமல் பிரிவு 4,போக்குவரத்து காவல் நிலையம் 5 என, 61 காவல் நிலையங்கள் உள்ளன.இந்தாண்டு மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 236
 'போக்சோ'வில் தண்டனை பெற்றோர்...16 பேர்; கடலூர் மாவட்ட போலீசார் அதிரடி

கடலுார் மாவட்டத்தில், கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி உள்ளிட்ட ஏழு காவல் உட்கோட்டங்கள் உள்ளன.

இதில், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் 6, சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் 46, மது விலக்கு அமல் பிரிவு 4,போக்குவரத்து காவல் நிலையம் 5 என, 61 காவல் நிலையங்கள் உள்ளன.இந்தாண்டு மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 236 வழக்குகளில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு, களவாடப்பட்ட 1 கோடியே 79 லட்சத்து 96 ஆயிரம் 172 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

43 கொலைவழக்குகளில் 42 பேர் கைது செய்யப்பட்டனர்.போக்குவரத்து விதிகளை மீறியதாக 4,73,132 வழக்குகள் பதிவு செய்து, 39 லட்சத்து 7 ஆயிரத்து 420 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.கடந்த 2020ல் 448 சாலை மரண வழக்கில் 512 பேர் இறந்தனர். இந்தாண்டு 426 சாலை மரண வழக்குகளில் 445 பேர் இறந்தனர்.இது கடந்தாண்டை ஒப்பிடுகையில் 15 சதவீதம் குறைவாகும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,189 பழையகுற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.'போக்சோ' வழக்கில் 16 பேருக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.கற்பழிப்பு, வரதட்சணை, பெண் கடத்தல் வழக்குகளில் 426 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.388 கஞ்சா விற்பனை வழக்குகள் பதிவு செய்து, 533 பேர் கைது செய்யப்பட்டு 91 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.இதன் மதிப்பு 9,11,600 ரூபாய் ஆகும். தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை, பதுக்கியதாக 703 வழக்குகள் பதிவுசெய்து, 714 பேர் கைது செய்யப்பட்டனர். 6,600 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதன் மதிப்பு ரூபாய் 59,07,600 ஆகும்.மது கடத்தல், விற்பனை செய்ததாக 9,919 வழக்குகள் பதிவு செய்து 10,094 பேர்கைது செய்யப்பட்டனர்.21,278 லிட்டர் சாராயம், 50,043 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுவிலக்கு குற்றவழக்கில் 314 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டு அதன் மூலம் கிடைத்த 43 லட்சத்து 63 ஆயிரத்து 758 ரூபாய் அரசு கருவூலத்தில்செலுத்தப்பட்டது.தொடர் கொலை, கொள்ளை, சாராய கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட 37 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பொதுஇடங்களில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 1,350 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.மாயமான 476 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த தலைமறைவு குற்றவாளிகள்2,666 கைது செய்யப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X