இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தமிழகத்திலுள்ள கோவில்களில், நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்; அதற்கு தடையில்லை என்று, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

ஹிந்து கோவில்களுக்கு தனித்தனியாக சம்பிரதாயங்களும், வழிபாட்டு முறைகளும் உள்ளன. காலை முதல் மாலை வரை ஒவ்வொரு காலத்துக்கும் கால பூஜை இருக்கும். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதிசி போன்ற நாட்களில் மட்டுமே இரவு நேரம் கோவில்கள் திறந்திருப்பது வழக்கம். ஆனால், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு, 12:00 மணிக்கு கோவிலை திறப்பது என்பது கண்டனத்துக்குரியது.
தமிழர் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சிதைக்கும் இந்த ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அரசுக்கு ஹிந்து முன்னணி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அமைச்சரின் அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு, காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE