நாய்கள் கடித்து குதறிய குழந்தை கவலைக்கிடம்: தாயின் உருக்கமான வீடியோ வைரல்

Added : டிச 31, 2021 | கருத்துகள் (51) | |
Advertisement
நெய்வேலி: நெய்வேலியில் நாய்கள் கடித்து குதறிய 2 வயது குழந்தை கவலைக்கிடமாக உள்ளது. அவரது தாயின் உருக்கமான வீடியோ பதிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் -4 ஐ சேர்ந்தவர் சேகர்; என்.எல்.சி., முதல் சுரங்கத்தில் டெக்னிஷியனாக பணிபுரிகிறார். இவரது மகள் தமிழரசி கணவர் சபரிநாத்துடன் ஓசூரில் வசிக்கிறார். இவர்களுக்கு அயான்ஷ், 2., என்ற மகன்
dog,child,hospital,நாய், குழந்தை, கவலைக்கிடம்

நெய்வேலி: நெய்வேலியில் நாய்கள் கடித்து குதறிய 2 வயது குழந்தை கவலைக்கிடமாக உள்ளது. அவரது தாயின் உருக்கமான வீடியோ பதிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் -4 ஐ சேர்ந்தவர் சேகர்; என்.எல்.சி., முதல் சுரங்கத்தில் டெக்னிஷியனாக பணிபுரிகிறார். இவரது மகள் தமிழரசி கணவர் சபரிநாத்துடன் ஓசூரில் வசிக்கிறார். இவர்களுக்கு அயான்ஷ், 2., என்ற மகன் உள்ளார். கடந்த ஒரு மாதமாக அயான்ஷ் தாத்தாவுடன் நெய்வேலியில் தங்கியிருந்தார். நெய்வேலி மெயின் பஜாரில் உள்ள கோல்டன் பூங்காவிற்கு சேகர் பேரனை அழைத்துச் சென்றுள்ளார்.


latest tamil news



அப்போது குழந்தை தண்ணீர் கேட்டதால், சேகர் தண்ணீர் பாட்டில் எடுத்து வருவதற்குள் அங்கிருந்த தெருநாய்கள் குழந்தையை சூழ்ந்து வெறித்தனமாக கடித்து குதறின. அருகிலிருந்தவர்கள் போராடி குழந்தையை பலத்த காயங்களுடன் மீட்டனர். புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குழந்தையின் தாய் தமிழரசி உருக்கமான வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், என் குழந்தைக்கு ஏற்பட்டது போல் எந்த குழந்தைக்கும் நேரக்கூடாது. வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதறியபடி கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
05-ஜன-202216:20:35 IST Report Abuse
Sathish ஒரு பிரச்னையை சரி செய்ய ஒரு உயிரை காவு கொடுக்கணுமா நம்ம? உயிர் போனால் தான் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? மாநகராட்சி அதிகாரிகளை பிடித்துகொண்டுவந்து அந்த வெறி நாய்கள் மத்தியில் விட்டு கடி வாங்கவிடனும். அதுதான் சரியான தண்டனை.
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
05-ஜன-202212:30:10 IST Report Abuse
pradeesh parthasarathy யானை இறந்தால் கிரிக்கெட் வீரர் முதல் பக்கோடாஸ் வரை கதறுவார்கள் . சக மனிதன் இறந்தால் நாயை காப்பற்றுவோம் , புலிகளை காப்பாற்றுவோம் என்று விலங்கு உரிமை ஆர்வலர்களாக மாறுவார்கள் .... விசித்திரமான பக்கோடாஸ்கள் ...
Rate this:
Cancel
வால்டர் - Chennai,இந்தியா
04-ஜன-202217:46:43 IST Report Abuse
வால்டர் வார்டு மெம்பர் கூட இப்போ கார்ல தான் சுத்துறாங்க. பொதுமக்களுக்கு எங்க பாதுகாப்பு இருக்கு? பப்ளிக் செர்வண்ட் எல்லாரும் பப்ளிக்ல நடந்து போனாதான் நடைமுறை சிக்கல்கள் தெரிய வரும். சில பெண்கள் இரவு பனி முடித்து வீடு திரும்பும் பொது இந்த தெருநாய்கள் தொல்லை தாங்க முடியாது. முடியட்டும் விடியட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X