லண்டன்: கொரோனா வைரசை தடுக்கும் 'கோவிஷீல்டு' தடுப்பூசி அறிமுகமாகி நேற்றுடன் ஓராண்டு முடிவடைந்தது.
ஐரோப்பாவைச் சேர்ந்த பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலை விஞ்ஞானிகள், 2020 மார்ச்சில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியை துவக்கினர். அவர்கள் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கு டிச.,30ல் பிரிட்டன் அரசு அங்கீகாரம் வழங்கியது. இந்த தடுப்பூசி மருந்தை 'ஆஸ்ட்ரா ஜெனகா' நிறுவனம் தயாரிக்கிறது.
இது குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது: பிரிட்டன் மற்றும் உலக நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான நமது போர், ஆக்ஸ்போர்டு மற்றும் ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனங்களின் உதவியின்றி சாத்தியமாகி இருக்காது. திறமையான விஞ்ஞானிகள் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை லாப நோக்கமின்றி ஆஸ்ட்ரா ஜெனகா தயாரித்து அளித்ததற்கு நன்றி.பிரிட்டனில் 5 கோடி பேருக்கும், 170 நாடுகளில் 250 கோடி பேருக்கும் கோவிஷீல்டு செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
உலகில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கிய முதல் நாடு பிரிட்டன். இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து தயாரிக்கும் உரிமத்தை, மஹாராஷ்டிராவின் புனேயில் செயல்படும் 'சீரம்' நிறுவனம் பெற்றுள்ளது.
ஐரோப்பாவைச் சேர்ந்த பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலை விஞ்ஞானிகள், 2020 மார்ச்சில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியை துவக்கினர். அவர்கள் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கு டிச.,30ல் பிரிட்டன் அரசு அங்கீகாரம் வழங்கியது. இந்த தடுப்பூசி மருந்தை 'ஆஸ்ட்ரா ஜெனகா' நிறுவனம் தயாரிக்கிறது.
![]()
|
உலகில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கிய முதல் நாடு பிரிட்டன். இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து தயாரிக்கும் உரிமத்தை, மஹாராஷ்டிராவின் புனேயில் செயல்படும் 'சீரம்' நிறுவனம் பெற்றுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement