திருநெல்வேலி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதால் தலைமறைவானார். மேலும் ஒரு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சிக்கலில் உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளி தென்னிந்திய திருச்சபை டயோசீசன் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளியாகும். அதன் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் 51, பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவிகளை சிறப்பு வகுப்புகளுக்கு வரச் செய்துள்ளார். அவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் ஆப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து பிளஸ் 1 மாணவி புகாரில் திசையன்விளை போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவரை சி.எஸ்.ஐ., நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. தற்போது தலைமறைவாக உள்ளார்.
தென்காசி மாவட்டம் பங்களா சுரண்டையில் செயல்படும் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது இத்தகைய பாலியல் குற்றச்சாட்டுகளை சில மாதங்களுக்கு முன் மாணவிகள் கூறினர். பள்ளியின் விசாரணை குழுவினர் விசாரித்து உண்மை என சி.எஸ்.ஐ., நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்தனர். அவர் மீதான நடவடிக்கை குறித்து சி.எஸ்.ஐ., நிர்வாகம் முறையாக தெரிவிக்கவில்லை.
தூய யோவான் பி.எட். கல்லூரியில் பேராசிரியையிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக பேராசிரியர்கள மற்றும் ஊழியர் மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாப்டர் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்திற்கு பிறகு சி.எஸ்.ஐ., பள்ளி, கல்லூரிகள் மீதான சிக்கல்கள் தொடர்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE