மீண்டும் ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது: அமித்ஷா கர்ஜனை

Updated : டிச 31, 2021 | Added : டிச 31, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
அலிகார்: உத்தர பிரதேசத்தில் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வருவதை அகிலேஷ், மாயாவதி அல்லது காங்கிரஸ் தலைவர்கள் யாராலும் தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.,க்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ., முனைப்பு காட்டி வருகிறது. மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் அரசுகளின் சாதனைகளை எடுத்துக்
Amit Shah, UP, BJP, Yogi Adityanath, அமித்ஷா, உபி, உத்தரபிரதேசம், பாஜக, பாஜ, யோகி ஆதித்யநாத்

அலிகார்: உத்தர பிரதேசத்தில் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வருவதை அகிலேஷ், மாயாவதி அல்லது காங்கிரஸ் தலைவர்கள் யாராலும் தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.,க்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ., முனைப்பு காட்டி வருகிறது. மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் அரசுகளின் சாதனைகளை எடுத்துக் கூறும் ஜன் விஸ்வாஸ் யாத்திரையை தொடங்கியுள்ளனர். 6 மண்டலங்களில் தொடங்கி இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது. வியாழனன்று இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அலிகாரில் நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.

பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. பொதுமக்கள், குறிப்பாக நமது சகோதரிகள் மற்றும் மகள் குண்டர்களின் துன்புறுத்தல்களுக்கு ஆளாகினர். இன்று யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அவர்களை காணவில்லை. ஹனுமன் பக்தர்களை தான் பார்க்க முடிகிறது. மறைந்த பா.ஜ., தலைவரும், முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங் நல்லாட்சி என்றால் என்ன என்பதைக் காட்டினார். ராம ஜென்மபூமிக்காக தனது பதவியை தியாகம் செய்தார்.


latest tamil newsஅகிலேஷ் யாதவுக்கு கல்யாண் சிங் ஞாபகம் வரவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஜின்னா தான் நினைவுக்கு வருகிறார். ஜின்னாவைப் புகழ்ந்து பேசுபவர்களுக்கு வாக்களிப்பீர்களா? ராம ஜென்ம பூமிக்காக அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டார். சமாஜ்வாதி அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, தடியடி நடத்தியது. ஆனால் நமது பிரதமர் ராமர் கோவிலுக்கு பூமி பூஜை செய்தவர். நீங்கள் என்ன முயற்சித்தாலும் இன்னும் சில மாதங்களில் விண்ணை முட்டும் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும். அகிலேஷ், மாயாவதி அல்லது காங்கிரஸ் தலைவர்கள் யாராலும் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியாது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Sundaramurthy - Chennai,இந்தியா
31-டிச-202118:26:45 IST Report Abuse
P Sundaramurthy ஓ மை கடவுளே எங்கள் மீது இரக்கம் வரவில்லையா
Rate this:
Cancel
Venugopal S - Erode,இந்தியா
31-டிச-202118:21:52 IST Report Abuse
Venugopal S ஓஹோ,அது கர்ஜனையா ? நான் கூட குறட்டை விட்டார் என்று நினைத்தேன்.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
31-டிச-202117:20:00 IST Report Abuse
Vijay D Ratnam யோகி ஆதித்யா என்ற சிங்கத்தை எதிர்க்க சமமான ஒரு சிங்கம் வேண்டும். ஆனால் உ.பில அந்த சிங்கத்துக்கு எதிரே நிற்பது 2022 மற்றும் 2027 முடியாது. 2032 லயாவது ஒரு சிங்கம் வருதான்னு பார்ப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X