இரவு ஊரடங்கை விட முகக்கவசம், தடுப்பூசியே நம்மை காக்கும்: சவுமியா சுவாமிநாதன்

Updated : ஜன 01, 2022 | Added : டிச 31, 2021 | கருத்துகள் (6)
Advertisement
ஜெனிவா: ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அறிவியல் முறைப்படி ஊரடங்கு போட வேண்டும் என்றும், இரவுநேர ஊரடங்கு பயனளிக்காது, முகக்கவசம், தடுப்பூசியே நம்மை காக்க போகிறது எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது: 90 சதவீத மக்கள் முழு நேரமும் முகக்கவசம்
WHO, Chief Scientist, Soumya Swaminathan, Masks, Vaccination, More Effective, Not Night Curfews, உலக சுகாதார அமைப்பு, தலைமை விஞ்ஞானி, சவுமியா சுவாமிநாதன், முகக்கவசம், மாஸ்க், தடுப்பூசி, இரவுநேர ஊரடங்கு

ஜெனிவா: ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அறிவியல் முறைப்படி ஊரடங்கு போட வேண்டும் என்றும், இரவுநேர ஊரடங்கு பயனளிக்காது, முகக்கவசம், தடுப்பூசியே நம்மை காக்க போகிறது எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது: 90 சதவீத மக்கள் முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருந்தால், கோவிட் பரவலை வெகுவாக குறைக்கலாம். அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். உலக நாடுகள் ஒமைக்ரான் பரவலுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கும் போது அறிவியல் முறைப்படி விதிக்க வேண்டும். பொருளாதாரமும் நலிவடையாமல் பாதுகாக்க வேண்டும். நாம் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பயப்பட கூடாது.


latest tamil news


ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கான தனிப்பட்ட தரவுகளை உருவாக்க வேண்டும். ஒமைக்ரான் வருகிறது என்றால் அவர் எத்தனை டோஸ் போட்டுள்ளார், கடைசி டோஸ் எப்போது போட்டார் என்று ஆராய வேண்டும். அதற்கு ஏற்றபடி பூஸ்டர் விதிகளை கொண்டு வர வேண்டும். நாம் முதலில் வயதானவர்களை, உடல் நோய் கொண்டார்களை காக்க வேண்டும்; அவர்களுக்கு பூஸ்டர் வழங்க வேண்டும். அதே சமயம் எல்லோருக்கும் பூஸ்டர் தேவையா என்பது தொடர்பான ஆய்வு முடிவுகளும் நம்மிடம் இல்லை.


latest tamil news


பள்ளிகளில் கட்டுப்பாடுகள் கொண்டு வருவது பற்றி யோசிக்கலாம். தியேட்டர், மால் போன்ற இடங்களில்தான் அதிகம் கொரோனா பரவுகிறது. இங்குதான் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். மற்றபடி இரவுநேர ஊரடங்கு எல்லாம் பயன் அளிக்காது. இதற்கு பின் எந்த விதமான அறிவியலும் இல்லை. அறிவியல் முறைப்படிதான் ஊரடங்கு போட வேண்டும். முகக்கவசம் அணிவதும், தடுப்பூசி செலுத்திக்கொல்வதும் மட்டுமே நம்மை காக்க போகிறது. அதுதான் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஜன-202204:56:28 IST Report Abuse
முருகன் மக்களை குழப்பத்தில் வைப்பது மட்டுமே உங்கள் வேலை.
Rate this:
Cancel
Duruvan - Rishikesh,அன்டார்டிகா
31-டிச-202119:17:18 IST Report Abuse
Duruvan அய்யர் ஊட்டு பொண்னு இல்ல அப்படிதான் பேசுவெ
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
31-டிச-202118:20:07 IST Report Abuse
venkatan முகமூடி போடு..கூட்டம் தவிர்.. தடுப்பு ஊசி போடு..முக சுத்தம் கை சுத்தம் பேணு..அவரவர் தனக்கென ஒரு தனி பாதுகாப்பு வளையம் ஏற்படுத்திக்கொள்.. அடுத்தவரையும் காத்து கொள். இப்படி பல முறை நாம் சொல்லிஆயிற்று. கேட்பாரில்லை..வந்தால் வருந்து.அரசாங்கம் என்ன செய்ய முடியும்? அறிவியலை விட்டுவிட்டு சுயமரியாதை சீர் திருத்தம் மனித உரிமை பயனளிக்காது. இந்த கோவிட்19 ன் புதிய சமூக சமத்துவக் கொள்கைக்கு மேல்முறையீடு கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X