சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'இப்படி மாறி விட்டதே!'

Added : டிச 31, 2021 | கருத்துகள் (1)
Advertisement
'இப்படி மாறி விட்டதே!'கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், மூத்த கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் சார்பில், இலக்கிய விருது வழங்கும் விழா, என்.ஜி.எம்., கல்லுாரியில் நடந்தது. பாலசுப்ரமணியம் பேசுகையில், 'படிப்பில் அக்கறை இல்லாத என்னை, கேரள மாநிலம் தத்தமங்கலத்தில் உள்ள ஆசிரியர் சாமியப்ப பிள்ளையிடம் சேர்த்தனர். அவர் அதிகாலை, 5:00 மணிக்கு பிரம்படி கொடுத்து, எழுப்பி படிக்க
பக்க வாத்தியம்


'இப்படி மாறி விட்டதே!'



கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், மூத்த கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் சார்பில், இலக்கிய விருது வழங்கும் விழா, என்.ஜி.எம்., கல்லுாரியில் நடந்தது.
பாலசுப்ரமணியம் பேசுகையில், 'படிப்பில் அக்கறை இல்லாத என்னை, கேரள மாநிலம் தத்தமங்கலத்தில் உள்ள ஆசிரியர் சாமியப்ப பிள்ளையிடம் சேர்த்தனர். அவர் அதிகாலை, 5:00 மணிக்கு பிரம்படி கொடுத்து, எழுப்பி படிக்க வைப்பார். அன்று அவரிடம் வாங்கிய பிரம்படிகள் தான், 'சாகித்ய அகாடமி' விருது வாங்கும் வரை நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும் ஆதாரம்' என நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.
அங்கிருந்த பேராசிரியர் ஒருவர், 'அன்று மாணவரின் எதிர்காலத்திற்காக, ஆசிரியர் தன்னை அர்ப்பணித்தார்... மாணவரும், ஆசிரியருக்கும் அடிபணிந்தார்... அப்படி இருந்த கல்வி சூழல், இன்று இப்படி மாறி விட்டதே... ஆசிரியர்களும் தண்ணி அடிச்சிட்டு திரியிறாங்க... மாணவர்களும் வாத்தியாருக்கு மரியாதையே கொடுக்க மாட்டேங்கிறாங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.


வீரர்களை கூகுளில் தேடிய மாணவர்கள்!



கோவையில் 75வது சுதந்திர தின விழா கண்காட்சி, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில், 'கொடிசியா'வில் நடந்தது.மாணவர்கள் கூடியிருந்த துவக்க விழாவில் பங்கேற்ற கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், ஆசிரியராக மாறி, 'சுதந்திர போராட்ட வீரர்கள் பெயரை, ஒவ்வொருவரும் சொல்லுங்கள்; முதல் வரிசையிலிருந்து மைக்கை கொடுங்கள்' என்றார்.
'வ.உ.சி., பாரதியார், தீரன் சின்னமலை, கட்டபொம்மன்...' என 10 பேரை கடந்ததும், பலருக்கு யாரை சொல்வது என தெரியவில்லை. வரிசையில் இருந்த பலரும் தலையை குனிந்து கொள்ள, கலெக்டர், 'என்ன, அவ்வளவு தானா; யாருக்கும் தெரியவில்லை என்பதால், தலையை குனிந்து கொண்டீர்களா?' என கேட்டார்.
அங்கிருந்த ஒருவர், 'கூகுளில் தேடுறோம் சார்...' என, 'பட்'டென பதில் சொன்னார்.'அப்படியாவது தேடிப் பார்த்து சொல்லுங்க...' என கலெக்டர் சொல்ல, அரங்கம் 'கப்சிப்' ஆனது!


'இவரை கூட்டிட்டுவந்து நிறுத்தணும்!'



ஆதார் தலைமை துணை இயக்குனர் கோபாலன், திண்டுக்கல் குறைதீர் மையத்திற்கு வந்தார். அவர் கூறுகையில், 'இந்தியாவில் 99 சதவீதம் பேர் ஆதார் பெற்றுள்ளனர். தமிழகத்தில் பிறந்த குழந்தை முதல், 5 வயதுக்கு உட்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் இன்னும் ஆதார் பெறவில்லை.
'ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய, 40 சான்றிதழில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும். எந்தச் சான்றிதழும் இல்லாதவர்கள், உயர் அலுவலர்கள், ஊராட்சி தலைவர், எம்.எல்.ஏ.,விடம் சான்றிதழ் பெற்று முகவரியை
மாற்றலாம்.'ஆதார் கார்டை தொலைத்தவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கி அதையே பயன்படுத்தலாம்' என்றார்.'ஆதார் வாங்குறதுக்குள்ளே நாங்க படற அல்லல் சொல்லி மாளாது... ஆதார் மையத்துல ஒரு நாள் இவரை கூட்டிட்டு போய் நிறுத்தணும்...' என்றபடியே மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-ஜன-202219:34:04 IST Report Abuse
D.Ambujavalli இன்னும் கொஞ்ச நாளில் காந்தியையே கூகுளில் தேடும் காலம் வந்துவிடும் போலிருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X