உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் திமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
![]()
|
வி.மீனாட்சி சுந்தரம், பறக்கை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: செந்தில் பாலாஜி, ராஜேந்திர பாலாஜி... பெயரில் என்னே ஒரு ஒற்றுமை... இரண்டு வல்லவர்களும் சில ஆண்டுகளுக்கு முன் வரை, அ.தி.மு.க., என்ற ஒரே குட்டையில் குப்பை கொட்டியோர் தான்!
இருவரும், அமைச்சர் பதவியில் இருந்த போது, தாங்கள் சார்ந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் வாங்கியுள்ளனர். வாக்களித்தபடி வேலை வாங்கி தந்திருந்தால், அப்பாவி இளைஞர்களிடம் பணம் வசூலித்திருப்பது, காதும் காதும் வைத்தது போல, மூன்றாம் நபருக்கு தெரியாமல் முடிவுக்கு வந்திருக்கும்.
![]()
|
என்ன கிரகக் கோளாறோ, இரு வல்லவர்களாலும் பணம் கொடுத்த இளைஞர்களுக்கு வேலை ஏற்பாடு செய்து தர முடியவில்லை.இரு வல்லவர்களில் ஒருவரான செந்தில் பாலாஜி, அ.தி.மு.க.,விலிருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்து விட்டார். செந்தில் பாலாஜியிடம் பணம் கொடுத்து ஏமாந்த ஒருவர், நீதிமன்ற படியேறினார். அவரிடம் ஆதாரம் இருந்ததால், தி.மு.க.,வால் ஏதும் செய்ய முடியவில்லை.
இந்த வழக்கு, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கே உலை வைக்க காத்திருந்தது. இதனால், சாதாரண பஞ்சாயத்து பேசி வாங்கிய பணத்தை திருப்பித் தருவதாக, செந்தில் பாலாஜி ஒப்புக் கொண்டு, வழக்கில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார்; அமைச்சர் பதவியும் ஆட்டம் காணாதவாறு காய் நகர்த்தி, 'செட்டில்' ஆகி விட்டார்.
இரண்டாவது வல்லவனான ராஜேந்திர பாலாஜி, ஏன் இப்படி ஊர் ஊராக தலைமறைவாக திரிந்து கொண்டிருக்கிறார்; ஒளிந்து கொண்டிருக்கிறார்? வழிகாட்டும் ஒளி விளக்காய் செந்தில் பாலாஜி கடைப்பிடித்த வழி இருக்கவே இருக்கிறது.
அதே வழியை பின்பற்றி, பணம் வாங்கியோரிடம் அந்த தொகையை திருப்பிக் கொடுத்து, வழக்கிலிருந்து விடுபடலாமே! இன்னும் ஏன் என்ன தயக்கம்? செந்தில் பாலாஜியின் வழியை, ராஜேந்திர பாலாஜியும் கடைப்பிடிக்கலாமே!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement