'நீங்களே மீறலாமா?' பன்னீர்செல்வம் கேள்வி!

Updated : ஜன 01, 2022 | Added : ஜன 01, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை : அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் நேற்றைய அறிக்கை: கொரோனா தொற்று உயர்ந்து வரும் நிலையில், திருச்சியில் மாநாடு போன்ற கூட்டத்தை கூட்டி, முதல்வர் பேசியிருப்பது, வேலியே பயிரை மேய்வது போல உள்ளது. . முதல்வர் போட்ட கட்டுப்பாட்டை அவரேமீறியிருக்கிறார்.மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு, தற்போதுள்ள தடை தொடரும் என டிசம்பர் 13ம் தேதி அரசு


சென்னை : அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் நேற்றைய அறிக்கை: கொரோனா தொற்று உயர்ந்து வரும் நிலையில், திருச்சியில் மாநாடு போன்ற கூட்டத்தை கூட்டி, முதல்வர் பேசியிருப்பது, வேலியே பயிரை மேய்வது போல உள்ளது. .



latest tamil news



முதல்வர் போட்ட கட்டுப்பாட்டை அவரேமீறியிருக்கிறார்.மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு, தற்போதுள்ள தடை தொடரும் என டிசம்பர் 13ம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு முற்றிலும் மாறாக, நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் தஞ்சாவூரிலும், திருச்சியிலும், பெருந்திரளான கூட்டம் கூட்டப்பட்டு, அந்த விழாவில் முதல்வர் பேசி உள்ளார்.


latest tamil news



திருச்சி கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், 'அமைச்சர் நேரு மீண்டும் ஒரு மக்கள் கடலை, இங்கே உருவாக்கிஇருக்கிறார். அதனால் தான் நேரு என்றால் மாநாடு; மாநாடுஎன்றால் நேரு' என்று கூறியுள்ளார். இதில் இருந்து முதல்வரின் உத்தரவை, அவரே மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. முதல்வரே கட்டுப்பாட்டை மீறுகிறார் என்றால், மக்கள் எப்படி மீறாமல்இருப்பர்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
01-ஜன-202214:17:59 IST Report Abuse
Suppan டீம்கா ஆசாமிகள் பெசல் தடுப்பூசி போட்டுக்கிட்டு இருக்காங்க. கொரோனாவாவது ஓமைக்ரானாவது. அதெல்லாம் முரசொலி ஆட்களை ஒன்றும் செய்யாது.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
01-ஜன-202213:36:08 IST Report Abuse
கல்யாணராமன் சு. திமுகவிடம் நேர்மையை எதிர்பார்ப்பதைவிட கடினம்..... முயற்சியே செய்யாதீர்கள்.........ஏமாந்து போவீர்கள்
Rate this:
Cancel
rajasekaran - neyveli,இந்தியா
01-ஜன-202213:13:01 IST Report Abuse
rajasekaran கோர்ட் என்ன செய்து கொண்டிருக்கிறது. நீதிபதிகள் இந்த ஆட்சிக்கு பயப்படுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X