
காஷ்மீரின் கட்ரா என்ற பகுதியில் வைஷ்ணவ தேவி கோயில் உள்ளது. புத்தாண்டு என்பதால் ஆயிரக்கணக்கானவர்கள் தரிசனம் செய்ய வந்திருந்தனர். கூட்டம் அதிகம் வர பக்தர்கள் முண்டியடித்தனர். வரிசையில் இருந்தவர்கள் பலர் அம்மனை வணங்க வேகமாக செல்ல முற்பட்டனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் கீழே விழுந்து காயமுற்றனர். 12 பேர் சம்பவ இடத்தில் இறந்தனர். காயமுற்றவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE