சென்னை வானிலை மையத்தை மேம்படுத்துக: உள்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

Updated : ஜன 02, 2022 | Added : ஜன 01, 2022 | கருத்துகள் (84) | |
Advertisement
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மழை குறித்து உரிய நேரத்தில் சரியாக கணக்கிட்டு எச்சரிக்கை அளிக்க போதுமான திறன் குறைபாடாக உள்ளதால், மாநில மற்றும் மாவட்ட
சென்னை வானிலை மையம், வானிலை மையம், முதல்வர் ஸ்டாலின், ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமித்ஷா, Chennai, D.M.K, M.K.Stalin, Stalin, Weather,

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மழை குறித்து உரிய நேரத்தில் சரியாக கணக்கிட்டு எச்சரிக்கை அளிக்க போதுமான திறன் குறைபாடாக உள்ளதால், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் தக்க நேரத்தில் உரிய முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை அடிக்கடி ஏற்படுகிறது. இது பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் மருத்துவ சேவைகள் வழங்குவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு உயிர் உடைமை இழப்புகள் ஏற்படுவதற்கும் முக்கியமான கட்டமைப்புகள் சேதமடைவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது.


latest tamil news



இந்நிகழ்வுகள் சென்னை வானிலை மையத்தின் வானிலை அறிக்கை தயாரிக்கும் அமைப்பினை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அதன் தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அதன் தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்துவதில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றன.
எனவே, பெருமழை புயல் போன்ற ரெட் அலெர்ட் சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
03-ஜன-202209:48:01 IST Report Abuse
Ravichandran Narayanaswamy முதலில் ஊழலில்லா அரசியல்வாதிகளையும் லஞ்சம் வாங்காத அரசு அதிகாரியையும் முதலில் உருவாக்கு என்று மத்திய அரசு சொன்னால் என்ன செய்வார்?
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
03-ஜன-202204:49:32 IST Report Abuse
meenakshisundaram ஏன் ?ஒன்றிய (?) அரசை கேக்குறே ?நீயா ஒரு குழு அமைக்க வேண்டியது தானே ?அப்புறம் தீர்மானம் போட்டு ஆளுநரை சந்தித்து .....
Rate this:
Cancel
02-ஜன-202206:06:02 IST Report Abuse
ராஜா இங்கே குடிக்க தண்ணீர் இல்லை இதில் நிலவில் தண்ணீர் உள்ளதா என்று ஆராய்ச்சி செய்யும் செயற்கைகோள் எதற்கு என்று செல்தட்டி போன்றோர்கள் வாயை வாடகைக்கு வாங்கி மத்திய அரசை விமர்சித்து திமுக என்னும் விக்ஞான கட்சி. இன்று தன் நிர்வாக சீர்கேட்டை மறைக்க தந்தை பாணியில் முதலைக்கண்ணீர் கடிதம் வரைகிரார். தன் பலம் அறிந்தவனே சிறந்த புத்திசாலி. இங்கிருக்கும் கருவிகள் புதுப்பிக்கப்பட்ட வேண்டும் என்று அந்தத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கு இதுவரை தெரியவில்லையா? இதில் மண்டல வானியல் மையத்தின் தவறுகளும் உள்ளது.வருடத்தில் சில மாதங்கள் மட்டும் தான் நேரடி கண்காணிப்பு செய்வது. மற்ற நேங்களில் புள்ளியியல் அடிப்படையில் மட்டுமே அறிக்கை வாசிக்க வேண்டியது. அது சரி போனமுறை வானிலை மையம் முன்னதாகவே எச்சரித்த போது அரசு என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தது? ஒன்றும் இல்லை தானே!? அதன் பின்னதாக என்ன நிவாரணம் மற்றும் சாலை மற்றும் சுகாதார கட்டமைப்புகளில் என்ன சீர்திருத்த பணிகள் அரசு செய்துள்ளது? அறிவாலய அரசு அறிக்கையை மட்டும் வாங்கி வைத்துகொண்டு வேடிக்கை பார்பதற்கு எதற்கு மக்கள் வரிப்பணத்தில் பல கோடி மதிப்புள்ள கருவிகள்? மேலும், இது உலக வெப்பமயமாதல் காரணமாக நடக்கிறது என்றால் சென்னை வாசிகள் நடந்தும், பொது போக்குவரத்து மூலமாகவா போக வேண்டிய இடங்களுக்கு போக போகிறார்கள். அதே ஒரு கார் ஒரு பயணி அவலம் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X