டிச., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.29 லட்சம் கோடி

Updated : ஜன 02, 2022 | Added : ஜன 01, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி: 2021 டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி 1.31 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 2020 டிச.,மாதத்துடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகம் ஆகும்.இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2021 டிசம்பரில் ஜிஎஸ்டி ஆக ரூ.1,29,780 கோடி வசூல் ஆகி உள்ளது.அதில்சிஜிஎஸ்டி ரூ.22,578 கோடிஎஸ்ஜிஎஸ்டி-ரூ.28,658ஐஜிஎஸ்டி-ரூ.69,155 கோடி(பொருட்களின்
GST, collection, December, ஜிஎஸ்டி, வசூல், டிசம்பர், டிச,

புதுடில்லி: 2021 டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி 1.31 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 2020 டிச.,மாதத்துடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகம் ஆகும்.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2021 டிசம்பரில் ஜிஎஸ்டி ஆக ரூ.1,29,780 கோடி வசூல் ஆகி உள்ளது.
அதில்
சிஜிஎஸ்டி ரூ.22,578 கோடி
எஸ்ஜிஎஸ்டி-ரூ.28,658
ஐஜிஎஸ்டி-ரூ.69,155 கோடி(பொருட்களின் இறக்குமதி வரி ரூ.37,527 கோடி உள்பட)
செஸ்- ரூ.9,389 கோடி( பொருட்களின் இறக்குமதி வரி ரூ.614 கோடி உட்பட) அடங்கும்.


latest tamil news



இது கடந்த நவ., மாதம் வசூலான 1.31 லட்சம் கோடியை விட குறைவாகும். அதேநேரத்தில், கடந்த ஆண்டு(2020) டிச., மாதம் வசூல் ஆன ரூ.1.15 லட்சம் கோடியை விட, இது 13 சதவீதம் அதிகம் ஆகும். தொடர்ந்து 6வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
01-ஜன-202220:12:19 IST Report Abuse
J.Isaac மருந்துகள் வியாபாரம் அமோகமாக உள்ளது.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
01-ஜன-202219:07:50 IST Report Abuse
Bhaskaran அதிகம் கொடுக்கும் தமிழகத்தின் பங்கை தராமல் இழுத்தடிகாமல் மத்திய அரசு உடனடியாக கொடுக்கணும்
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
01-ஜன-202221:07:14 IST Report Abuse
Visu Iyerஅள்ளிக் கொடுத்த பணத்தை கொஞ்சமாக கிள்ளி கொடுப்பதற்காகவா ஜிஎஸ்ட்டி...
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-ஜன-202218:09:12 IST Report Abuse
Kasimani Baskaran இதில் பாதி வரியே போதுமானது. தமிழகம் ஆசியாவிலேயே சிறந்த மாநிலம். இன்னும் சிறப்பாக வளர ஒன்றிய அரசு தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இரண்டு மடங்காகக்கூட்ட வேண்டும். அதே சமயம் பாஜக வசமிருக்கும் கோவையில் சாக்கடை அள்ளுவதில் சிக்கனநடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. - உபிஸ்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
01-ஜன-202221:05:23 IST Report Abuse
Visu Iyerஇந்த வசூல் ராஜா இந்த பணத்தை எப்படி செலவு செய்கிறார்கள் என்று சொல்வதில்லை பார்த்தீர்களா..? உங்கள் பணம் அதை கேட்க தெரிந்து கொள்ள உங்களுக்கு உரிமை உள்ளது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X