டிச., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.29 லட்சம் கோடி| Dinamalar

டிச., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.29 லட்சம் கோடி

Updated : ஜன 02, 2022 | Added : ஜன 01, 2022 | கருத்துகள் (12) | |
புதுடில்லி: 2021 டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி 1.31 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 2020 டிச.,மாதத்துடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகம் ஆகும்.இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2021 டிசம்பரில் ஜிஎஸ்டி ஆக ரூ.1,29,780 கோடி வசூல் ஆகி உள்ளது.அதில்சிஜிஎஸ்டி ரூ.22,578 கோடிஎஸ்ஜிஎஸ்டி-ரூ.28,658ஐஜிஎஸ்டி-ரூ.69,155 கோடி(பொருட்களின்
GST, collection, December, ஜிஎஸ்டி, வசூல், டிசம்பர், டிச,

புதுடில்லி: 2021 டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி 1.31 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 2020 டிச.,மாதத்துடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகம் ஆகும்.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2021 டிசம்பரில் ஜிஎஸ்டி ஆக ரூ.1,29,780 கோடி வசூல் ஆகி உள்ளது.


அதில்


சிஜிஎஸ்டி ரூ.22,578 கோடி


எஸ்ஜிஎஸ்டி-ரூ.28,658


ஐஜிஎஸ்டி-ரூ.69,155 கோடி(பொருட்களின் இறக்குமதி வரி ரூ.37,527 கோடி உள்பட)


செஸ்- ரூ.9,389 கோடி( பொருட்களின் இறக்குமதி வரி ரூ.614 கோடி உட்பட) அடங்கும்.


latest tamil news



இது கடந்த நவ., மாதம் வசூலான 1.31 லட்சம் கோடியை விட குறைவாகும். அதேநேரத்தில், கடந்த ஆண்டு(2020) டிச., மாதம் வசூல் ஆன ரூ.1.15 லட்சம் கோடியை விட, இது 13 சதவீதம் அதிகம் ஆகும். தொடர்ந்து 6வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X