கிருஷ்ணகிரி எம்.பி.,க்கு காங்.,கில் புதிய பொறுப்பு

Added : ஜன 01, 2022 | |
Advertisement
புதுடில்லி:மேற்கு வங்க மாநிலம் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக, தமிழகத்தை சேர்ந்த டாக்டர் செல்லக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.காங்., கட்சியின் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:மேற்கு வங்க மாநிலம் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளின் காங்., பொறுப்பாளராக தமிழகத்தின் கிருஷ்ணகிரி லோக்சபா எம்.பி., டாக்டர் செல்லக்குமாரை

புதுடில்லி:மேற்கு வங்க மாநிலம் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக, தமிழகத்தை சேர்ந்த டாக்டர் செல்லக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
காங்., கட்சியின் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:மேற்கு வங்க மாநிலம் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளின் காங்., பொறுப்பாளராக தமிழகத்தின் கிருஷ்ணகிரி லோக்சபா எம்.பி., டாக்டர் செல்லக்குமாரை நியமித்து காங்., தலைவர் சோனியா உத்தரவிட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே ஒடிசா மாநில பொறுப்பாளர் பதவியும் வகிக்கிறார். இதற்கு முன்னதாக கோவா மாநில பொறுப்பாளராகவும் இருந்தார்.இவ்வாறு அவர் கூறினார்.மேற்கு வங்க காங்., பொறுப்பாளராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X