ஒத்துழைப்பு தாருங்கள்: முதல்வர் வேண்டுகோள்

Added : ஜன 01, 2022 | கருத்துகள் (3)
Advertisement
சென்னை:'அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தருவதுடன், வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.முதல்வர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:இந்த ஆண்டு மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான், நம் எல்லாருடைய எதிர்பார்ப்பு. அப்படி இருக்க வேண்டும் என்றால், கடந்த ஆண்டுகள் தந்த பாடங்களை மறந்துவிடக்
 ஒத்துழைப்பு தாருங்கள்: முதல்வர் வேண்டுகோள்

சென்னை:'அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தருவதுடன், வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:இந்த ஆண்டு மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான், நம் எல்லாருடைய எதிர்பார்ப்பு. அப்படி இருக்க வேண்டும் என்றால், கடந்த ஆண்டுகள் தந்த பாடங்களை மறந்துவிடக் கூடாது. கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலையில் இருந்து, மீண்டும் வந்திருக்கிறோம்.

இரண்டாவது அலை உச்சகட்டத்தில் இருந்த போது தான், முதல்வராக பொறுப்பேற்றேன். கொரோனாவை கட்டுப்படுத்துவது தான், முதல் வேலையாக இருந்தது. குறைந்த கால அளவிலேயே, இரண்டாம் அலையை கட்டுப்படுத்தினோம். அதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பும் முக்கியக் காரணம்.

தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், கொரோனா பரவலையும், இறப்பு எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த முடிந்தது. அதே மாதிரியான ஒத்துழைப்பைதான், இந்த புத்தாண்டில் எதிர்பார்க்கிறேன். கொரோனா பல உருமாற்றங்களை அடைந்து, தற்போது 'ஒமைக்ரான்' என்ற பெயரில் பரவும் வேகம் அதிகரித்து இருக்கிறது. அதனால், நாம் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
ஒமைக்ரான் பரிசோதனை, சிகிச்சைக்கான ஆக்சிஜன், படுக்கை, மருந்து அனைத்தும் போதுமான அளவில் இருக்கின்றன.கூடுதல் தேவையை யோசித்து, முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே யாரும் பயப்படத் தேவையில்லை.

உங்கள் ஒத்துழைப்புதான் எங்களுக்கு தேவை.ஒமைக்ரான் பரவலை தடுக்க, சில கட்டுப் பாடுகளை அரசு போட்டிருக்கிறது. அது உங்கள் பாதுகாப்பிற்காகத்தான். அந்த கட்டுப்பாடுகளை கடைபிடியுங்கள்; கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளை தவிருங்கள். இம்மாதம் முதல், 15 - 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு, தடுப்பூசி போடும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவோம்.

உங்கள் வீட்டில், அந்த வயதில் சிறுவர்கள் இருந்தால், மறக்காமல் தடுப்பூசி ஊசி போடச் செய்யுங்கள்.தடுப்பூசி முழுமையாக போட்டிருந்தால், ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டாலும், அதன் தாக்கம் மிகக் குறைவாகத் தான் இருக்கும் என, மருத்துவ வல்லுனர்கள் சொல்கின்றனர். அதனால், இதுவரை தடுப்பூசி போடாதவர்கள், உடனே போட்டுக் கொள்ளுங்கள்.தமிழக மக்கள் ஒவ்வொருவருடைய உடல் நலனும், மிகவும் முக்கியம். அதற்காகத் தான் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராம.ராசு - கரூர்,இந்தியா
02-ஜன-202215:05:42 IST Report Abuse
ராம.ராசு மக்கள் எப்போதுமே அரசுக்கு ஒத்துழைப்புத் தந்துகொண்டுதான் உள்ளார்கள். அதேசமயம் அரசின் உத்தரவுகள் மக்களுக்கு குழப்பாகவே உள்ளது. கூட்டம் கூடாக கூடாது.... தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றேனால் அரசால் மக்களுக்கு உத்தரவாள போடப்படுகிறது. ஆனால் ஒருபுறம் கோவில்களில் அலைமோதும் கூட்டம். எவ்வளவுதான் வலியுறித்தினாலும் முக கவசம் என்பது தாடைக்கும், அதற்க்கு கீழும்தான் இருக்கிறது. கோவில் என்பது ஒரு வளாகத்துக்குள் இருப்பது மட்டுமல்ல வழிபாடு செய்யும் இடத்தில் போதுமான காற்றோற்ற வசதி இருக்காது. என்றாலும் அங்கு மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் வழிபாடு என்ற பெயரில். நெரிசலில் சிக்கி இறந்துபோகும் அளவுக்கு கூட்டம். ஆனால் மெரினா கடற்கலை என்பது பரந்துபட்ட பகுதி. என்றாலும் அங்கு செல்லவே கூடாது என்ற கடுமையான கட்டுப்பாடு. அரசின் இப்படியான கட்டுப்பாடுகள் மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது அன்றாடப் போராட்டமாக இருக்கிறது. முக கவசம் அவசியம். கொரோனானாவைத் தடுக்குமா என்றால் இல்லை. கைகளை அடிக்கடி கைகளைக் கழுவுதல் கொரோனா தடுக்கப்படுமா என்றால் இல்லை. ஒருவருக்குஒருவர் போதுமான இடைவெளியில் இருந்தால் கொரோனா வராதா என்றால்... அதற்கும் விடை இல்லை. ஒரு தடுப்பூசி, இரண்டு தடுப்பூசி கொரோனாவை தடுக்குமா என்றால்.. உறுதியாகச் சொல்ல முடியாது. பிறகு எதற்காக இத்தனை அறிவுறுத்தல்கள், கேட்டால் பதில் கிடைப்பது இல்லை.. ஆனால் தடுப்பூசி கட்டாயம். "தடுப்பூசி கட்டாயமில்லை என்று அரசு எழுத்துப்பூர்வமான உத்தரவில் கொடுக்கப்பட்டுள்ளதே" என்று கேட்டால்... ஆமாம் என்றாலும், தடுப்பூசி கட்டாயம். அனைத்து வகையான நோய்களுக்கும் நமது பாரம்பரிய மருத்துவத்தில் மருந்து உண்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால் சித்தாவும், ஆயுர்வேதமும், நாட்டுப்புற வைத்தியம் இருந்து என்ன பயன்..... பெருமைப்பட்டுக் கொள்ளமட்டுமே.
Rate this:
Cancel
R Kumar - Triolet,மொரிஷியஸ்
02-ஜன-202214:53:07 IST Report Abuse
R Kumar கொஞ்சம்கூட கூசாமல் பொய்பேசுவதற்கு தீயைமூக்காவை விட்டால் யாருமில்லை . மதுரைபோல இன்னும் பல கூட்டத்தை கூட்டுங்கள் கோவிட தோற்று குறைந்துவிடும் . வெறும் விளம்பரத்திற்கு அறிக்கைவிடுவதை முதலில் நிறுத்துங்கள் .
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
02-ஜன-202204:00:35 IST Report Abuse
BASKAR TETCHANA ஒத்துழைப்பு கொடுங்கள் என்று கை எடுத்து கும்பிடுகிறாயே . நீ சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் கொஞ்சமாவது உனக்கு மதிப்பு கொடுப்பார்கள். உனக்கு என்ன இன்னும் 5 வருடம் காரில் வளம் வருவாய். மக்கள் இரு சக்கர வாகனத்தில் போகும் பொது தூசுகள் பட அதனால் அவர்களுக்கு கோரோனோ வருகிறது. அண்ணா .தி. மு. க ஆளும் பொது கோரோனோவை பற்றி கேவலமாக பேசினாய் இப்போ அதுவே உனக்கு திரும்பி விட்டது. எல்லாம் காலத்தின் கோலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X