ஆசைக்கு அளவில்லை!
மேகதாது அணை கட்டணும்னு கர்நாடகத்தில சர்வ கட்சிகளுமே ஒருமித்த கருத்தை கொண்டிருக்குது. இதை எதிர்க்கிறவங்க யாருமில்லை.எனவே, ஸ்டேட்டும், சென்ட்ரலும் பூக்காரங்க ஆட்சியாக இருப்பதால் சாதனையாக இருக்கும்னு திட்டம் போட்டாங்க. இதற்காக பாதயாத்திரை நடத்துவது போல் நடத்தி சாதகமாக சென்ட்ரல்காரங்க அறிவிக்க இருந்தாங்க.
ஆனா கை கட்சி தலைவரு முந்திக்கிட்டாரு. அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் ஆதரவை கேட்டவர், தற்போது திரைப்பட நடிகர்களோட ஆதரவை கேட்டிருக்காரு.கை கட்சியில் தனி செல்வாக்கு தேடும் முயற்சியில் ஆரம்பித்தவர், தற்போது அனைத்து தரப்பினர் ஆதரவையும் எதிர்ப்பாக்குறாரு!
எல்லாமே மேலிடம்!
முந்தைய 2021 பொங்கலின் போது கேபினட்டில் இருந்து ஒரு விக்கெட் காலியாகும்னு விஜயபுரா பூ கட்சி அசம்பிளிகாரர் ஆரூடம் சொன்னார். அவரது வாய் முகூர்த்தம் கேபினட்டின் கேப்டனை கழற்றி விட்டாங்க.
இந்த, 2022 பொங்கலுக்கு பிறகும் கேபினட்டில் இருந்து சிலரு நீக்கப்படுவருன்னு வாய் தொறந்து சொல்லி விட்டார். இதனால் யார், யார், வெளியேற போறாங்களோ...
இவரு சி.எம்.,மை மாற்ற சொல்லையாம். இவருக்கு சி.எம்., போஸ்ட் வேணும்னு ஆசையும் படலையாம். எல்லாம் மேலிடம் பார்த்து கொள்ளுமாம்!
பி.எம்.ஜி., பயிற்சியில் சி.எம்.ஜி.,
வாரணாசியில இந்துத்வா டிரெயினிங் கொடுத்ததை கர்நாடக சி.எம்.ஜி., பின்பற்றுகிறாராம். ரொம்போ எளிமையானவரு, பொறுமையானவரு, நிதானமாக செயல்படுபவர்னு பெருமைக்குரியவருக்கு இந்துத்துவா மீது ஈர்ப்பு ஏற்பட்டதன் அடையாளமாக மதம் மாற்றம் தடைச் சட்டம் அமல்படுத்திட்டாரு. இந்த ஒரு டிரண்டு போதுமாம்; பூ காரர்களை குஷி படுத்த முடியும்னு நம்பிக்கை கொண்டார்.
அனைத்து கோவில்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள், புனரமைப்பு பணிகள் செய்து காட்டி 2023 அசம்பிளி தேர்தலுக்கு பூ காரர்களுக்கு புஷ்டி டானிக் தருகிறாராம். எல்லாம் பி.எம்., ஜியின் பயிற்சி தானாம!.
என்ன பரிகாரம்!
சட்டசபைக்கு நடந்த இடைத்தேர்தலில் சி.எம்., சொந்த மாவட்டத்திலேயே பூ கட்சிக்கு தலைகுனிவு ஏற்பட்டது. சட்ட மேலவை தேர்தலில் கூட பூ கட்சிக்காரங்க வாரி வாரி இறைத்தும் எதிர்ப்பார்த்த சக்சஸ் கெடைக்காம போனது.
உள்ளாட்சி தேர்தலில் கூட கை காரங்களை விட பின்னுக்கு தள்ளி போனாங்க. படிப்படியாக தோல்வியை சந்திக்கிறதால், அடுத்து 2023 சட்டசபை பொதுத் தேர்தல் பூவுக்கு ஏமாற்றம் ஏற்படாமல் இருக்க, இப்பவே ஸ்பீட் ஒர்க் ஆரம்பிச்சிருக்காங்க. அதுக்கான பரிகாரத்தை தேடுறாங்க.
இருந்தாலும், யார் எப்புடி தோற்றாலும், அது சி.எம்., மீது விழுகிற அடியாகவே இருக்குதாம். கட்சி மேலிடம் உள்குத்து காரர்கள் மீதும் கவனத்தை திருப்பி இருக்காங்க. வெற்றிக்கனி பறிக்க மாநில சி.எம்., மேலும் பல சவால்களை சந்திக்க தயாராகி வர்ராறாம்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE