சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'இப்படி சட்டம் போடணும் பா!'

Added : ஜன 01, 2022 | கருத்துகள் (1)
Advertisement
'இப்படி சட்டம் போடணும் பா!'முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி, பா.ஜ., சார்பில் நல்லாட்சி தின கருத்தரங்கு மதுரையில் சமீபத்தில் நடந்தது.இதில், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா பேசுகையில், 'கொரோனாவிற்கு இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை அமல்படுத்தியவர், பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், இத்திட்டத்தை, தமிழகத்தில் நிறைவேற்றும்போது பிரதமர் மோடியின்
பக்க வாத்தியம்


'இப்படி சட்டம் போடணும் பா!'முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி, பா.ஜ., சார்பில் நல்லாட்சி தின கருத்தரங்கு மதுரையில் சமீபத்தில் நடந்தது.
இதில், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா பேசுகையில், 'கொரோனாவிற்கு இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை அமல்படுத்தியவர், பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், இத்திட்டத்தை, தமிழகத்தில் நிறைவேற்றும்போது பிரதமர் மோடியின் படம் இடம் பெறுவதில்லை; முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் இடம் பெறுகிறது...' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'மக்கள் வரிப்பணத்துல திட்டம் செயல்படுத்துறாங்க... இதுல பிரதமர், முதல்வர் படங்கள் எல்லாம் எதுக்கு இடம் பெறணும்... அரசின் சின்னம் மட்டுமே இருக்கணும்ன்னு சட்டம் போடணும் பா...'' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.


'கொடியேத்தினா கட்சி வளருமா?'சட்டசபை பொதுக்கணக்குக் குழு, கோவையில் பல்வேறு இடங்களில் சமீபத்தில் ஆய்வு செய்தது. இதன் தலைவர் செல்வப் பெருந்தகை, ஆய்வுக்கு செல்வதற்கு முன், காங்., அலுவலகத்தில் கட்சிக் கொடியேற்றினார்.அவர் பேசுகையில், 'காலை, 9:15 மணிக்கு பொதுக்கணக்கு குழு ஆய்வுக்கு போகணும்... 'கொஞ்சம் தாமதமாத் தான் வருவேன்'னு, கலெக்டர்கிட்ட சொல்லிட்டேன்... அதை விட கட்சி முக்கியம் இல்லையா... இங்க வேலையை முடிச்சுட்டுத் தான் அங்கே போகணும்...' என்றார்.அங்கிருந்த காங்., தொண்டர் ஒருவர், 'கொடியேத்துறதால கட்சி வளர்ந்துடுமா... அரசு பதவியில இருக்குறவங்க, அந்த பணியை நேர்மையுடன் செய்தால், மக்கள்கிட்ட நல்ல பெயர் வாங்கலாம்... கட்சியும் வளரும்... அது தெரியாமல் இருக்குறதால தான், தி.மு.க.,வை அண்டி கட்சி நடத்திக்கிட்டு இருக்கோம்...' என்றார். சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.


'இந்த கொடுமைக்கு முடிவே இல்லையா?'சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின், 253வது பிறந்தநாளை ஒட்டி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில், அவரது உருவப்படத்துக்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அப்போது நிருபர்களிடம், அமைச்சர் முத்துசாமி கூறுகையில், 'எந்தெந்த கட்டடங்கள் குறித்து புகார் வருகிறேதோ, அங்கெல்லாம் ஆய்வு செய்து வருகிறோம். அரசின் கையில் உள்ள அரசு குடியிருப்புகளில், 20 சதவீதம் தனியாரிடம் இருக்கிறது. இதில், 193 இடங்களில், 60 இடங்கள் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. எல்லாவற்றையும் இடிப்பதற்கு அனுமதி பெற்றுள்ளோம்...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர், 'அந்த கட்டடங்களை இடிச்சு, 'கமிஷன்' அதிகமா தருகிற நிறுவனத்துக்கு, கட்டடம் கட்ட ஒப்பந்தம் கொடுப்பாங்க... அதுவும், ரெண்டு வருஷத்துல இடியும்... இந்த கொடுமைக்கு ஒரு முடிவே இல்லைங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-ஜன-202219:56:47 IST Report Abuse
D.Ambujavalli Please don't repeat the same comment
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X